தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இருபெரும் துருவ தலைவர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களுமே இல்லாத தேர்தல் என்பதால் இந்த தேர்தல் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த தேர்தலில் ஒரு கூட்டணியில் இருந்து இன்னொரு கூட்டணிக்கு தடையில்லாமல் தாவும் குழப்பங்களும் நடந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜக, வன்னியர்கள் ஆதரவு தளத்தைக் கொண்ட பாமக ஆகிய கட்சிகள் அடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அணியில், சிபிஎம், சிபிஐ, தலித் கட்சியான விசிக, முஸ்லிம் கட்சிகளான ஐயூஎம்எல், மமக, வைகோவின் மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தங்கள் பக்கம் பாஜகவின் ஆதரவைப் பெற்றதையடுத்து டிடிவி தினகரனின் அமமுக தனித்து போட்டியிட முடிவு செய்தது. அமமுகவுடன் இப்போது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் கேப்டன் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியும் உள்ளது.
ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதாக உறுதியளித்து பின்வாங்கிய நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) முன்னிலை பெற்றுள்ளது. கமல்ஹாசனின் மநீம கூட்டணியில் தென் தமிழகத்தில் இந்து நாடார்களின் ஆதரவைப் பெற்றா சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (சமக) பச்சமுத்துவால் நிறுவப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே) ஆகிய 2 கட்சிகள் இணைந்துள்ளது.
இவர்கள் மட்டுமல்லாமல் ஒரு குறுகிய கால மற்றும் முக்கிய போட்டியாளர்களும் உள்ளனர்: சீமானின் நாம் தமிழர் கட்சி (மிகவும் பின் தங்கிய பிரிவு தொடண்டர்களை கொண்டது) மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி (பட்டியல் இனத்தில் தேவேந்திர குல வேளாளர் பிரிவு ஆதரவு தளத்தைக் கொண்டது) ஆகிய கட்சிகள் உள்ளன.
தேர்தலில் இது அதிமுக vs திமுக பொராகா இருக்கலாம். அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த இரு கட்சிகளும் 80% வாக்குகளைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர்.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் 1996-ல் ஜெயலலிதாவின் ஊழல் குற்றச்சாட்டு காலத்திற்குப் பிறகு, திமுக மற்றும் அதிமுகவின் மோசமான செயல்திறன் இது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். “இரு கட்சிகளுக்கும் எப்போதும் குறைந்தபட்சம் 20-22% வாக்குகள் உள்ளன. இதர கட்சிகள் 15% க்கும் அதிகமான வாக்குகளை எதிர்பார்க்க முடியாது.” என்று கூறினார்.
அதிமுக எடப்பாடி கே பழனிசாமி, திருச்சியில் மார்ச் 7ம் தேதி நடந்த மாநாட்டு கூட்டத்தை வைத்து திமுக் இந்த தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டினார். இந்த மாநாடு மிகப்பெரிய மாநாடுகளில் ஒன்று.
எடப்பாடி பழனிசாமியின் உரைகள், அவரது அரசாங்கத்தின் நிலையான அறிக்கைகள் திமுகவின் மு.க.ஸ்டாலின் உரைகளைவிட கவனத்தை ஈர்க்கிறது.
தனிப்பட்ட முறையில், சிறிய கட்சிகளின் தலைவர்களும் தங்கள் வாக்குகளை 7% முதல் 8% ஆகக் கணக்கிடுகிறார்கள். அமமுக இந்த எண்ணிக்கையைத் தொடும் என நம்புகிறது. கமல்ஹாசனின் மநீம, சீமானின் நாம் தமிழர் கட்சி 5% க்கு மேல் இலக்கு வைத்துள்ளது.
இந்த சூழலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 170 முதல் 200 தொகுதிகள் வரை வெற்றியை எதிர்பார்ப்பதாக மூத்த திமுக தலைவர் ஒருவர் கூறுகிறார். இருப்பினும், தங்களது கட்சி மோசமான நிலையிலும் கூட, திமுக 150 இடங்களுக்கு மேல் பெறாது என்று எதிரணியான அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார். ஆளும் கட்சித் தலைவரின் கருத்துப்படி, இப்போது அதிமுகவின் முக்கிய குறைபாடு என்னவென்றால், 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றியாளர்களாகத் தெரியவில்லை. பழனிசாமி வெற்றி பெறுவார். ஆனால், அவர் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்.
பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதிமுக வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. இருப்பினும், பாஜக வெற்றி எண்ணிக்கை இரட்டை இலக்கங்களைத் தொடாது என்கின்றனர்.
பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் ஒன்று கோவை தெற்கு தொகுதியும் ஒன்று. அந்த தொகுதியின் பிரபல வேட்பாளர் வானதி சீனிவாசன் கமல்ஹாசனை விட அதிகம் - மநீம வட்டாரங்களும் கமல்ஹாசனின் வெற்றி வாய்ப்பு குறைவு என்று ஒப்புக்கொள்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.