Advertisment

News Highlights: இன்று பிரசாரம் முடிகிறது; வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பிரசாரத்திற்கும் தடை

ஐந்து மாநில தேர்தல் குறித்தும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
News Highlights: இன்று பிரசாரம் முடிகிறது; வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பிரசாரத்திற்கும் தடை

தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,”காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி  ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோடி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும்  சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்,” என அமித்ஷா  பாராட்டினார். மேலும் இறந்த தலைவர்களை விமர்சிப்பதா? என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 21:06 (IST) 03 Apr 2021
    சோழிங்கநல்லூரில் ஸ்டாலின் பிரச்சாரம்

    சென்னை சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் சுயமரியாதையை மீட்பதற்காக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

  • 18:28 (IST) 03 Apr 2021
    மயிலாப்பூரின் மகளாக வந்து வாக்கு சேகரிக்கிறேன் - நடிகை ஸ்ரீபிரியா

    சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா தான் "மயிலாப்பூரின் மகளாக வந்து வாக்கு சேகரிக்கிறேன்" என்றும், தனக்கு மயிலாப்பூரில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும், செல்லும் இடமெல்லாம் தன்னை மகள்போல் பாவித்து வரவேற்பு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  • 18:25 (IST) 03 Apr 2021
    முதல்வர் பிரச்சாரம்

    சேலம் ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அறங்கேற்றி வருகிறார் என்றும், அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும், மக்களுக்கு சேவை செய்யும் அதிமுக அமைத்த கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றும் கூறியுள்ளார்.

  • 17:16 (IST) 03 Apr 2021
    நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டம் -அமித்ஷா உரை

    தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,"காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி  ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோடி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும்  சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்," என அமித்ஷா  பாராட்டினார். மேலும் இறந்த தலைவர்களை விமர்சிப்பதா? என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 17:16 (IST) 03 Apr 2021
    நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டம் -அமித்ஷா உரை

    தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,"காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி  ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோடி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும்  சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்," என அமித்ஷா  பாராட்டினார்.

    மேலும் இறந்த தலைவர்களை விமர்சிப்பதா? என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 17:12 (IST) 03 Apr 2021
    புதுச்சேரியில் ஸ்டாலின் பரப்புரை

    புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

  • 17:08 (IST) 03 Apr 2021
    பட்டபகலில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா - வளைத்து பிடித்த பறக்கும் படை

    சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் அதிமுகவிற்கு வாக்களிக்க கூறி பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த மூன்று பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.92000 பறிமுதல் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • 16:45 (IST) 03 Apr 2021
    அஸ்ஸாம் பாஜக தலைவர் பரப்புரை செய்ய அனுமதி

    அஸ்ஸாம் மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா மீண்டும் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து ஹிமந்தா பிஸ்வ சர்மா பரப்புரை செய்வதற்கான தடை நீக்கியுள்ளது.

  • 16:42 (IST) 03 Apr 2021

  • 16:33 (IST) 03 Apr 2021
    நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டம் -அமித்ஷா உரை

    தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,"காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி  ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோடி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும்  சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்," என அமித்ஷா  பாராட்டினார்.

  • 16:20 (IST) 03 Apr 2021
    அரிசி மூட்டைகள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

    இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 71 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாயல்குடி பேரூராட்சி சமுதாய கூடத்தில் பறக்கும்படை நடத்திய சோதனையில் அரிசி மூட்டைகள் சிக்கின. இது தொடர்பாக திமுக பிரமுகர் சசிக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

  • 16:10 (IST) 03 Apr 2021
    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம்

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது. இதனால், 27 மாவட்டங்களில் இயல்பை விட 4-6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும். மேலும், எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால், நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • 16:02 (IST) 03 Apr 2021
    திமுக வேட்பாளர் மீது வழக்குபதிவு

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் விஸ்வநாதன் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. எல்.என் பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் தந்த புகாரில் இரண்டு பேர் கைதான நிலையில் இப்பொழுது திமுக வேட்பாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

  • 15:58 (IST) 03 Apr 2021
    நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டம் அமித்ஷா உரை

    தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 15:57 (IST) 03 Apr 2021
    நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டம் -அமித்ஷா உரை

    தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் மோடி என்றும் கூறினார். மேலும், உதயநிதியைப் பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு ஏன் இரத்த கொதிப்பு வருகிறது என்று திமுக தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,"காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி  ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோடி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும்  சிறப்பாக மேற்கொண்டு வரும் முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்," என அமித்ஷா  பாராட்டினார். மேலும் இறந்த தலைவர்களை விமர்சிப்பதா? என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 15:43 (IST) 03 Apr 2021
    கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு - தலைமைச் செயலாளர்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கட்டுபாடுகளை தீவிரமாக்கவும் முடிவு. 846 நோய் கட்டுபாட்டு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

  • 14:08 (IST) 03 Apr 2021
    வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டரில் பிரசாரம் செய்ய தடை; மீறினால் சிறை

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணியோடு நிறைவுற உள்ள நிலையில், அதன் பிறகு, வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய கூடாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்வோர் மீது 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

  • 13:57 (IST) 03 Apr 2021
    செங்கோட்டையன் தங்கி இருந்த பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தோப்பூரில், 13 அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான தனியார் பள்ளியில் பிரசார பயணத்தின் போது தங்கியுள்ளார். அந்த பள்ளியில், அமைச்சருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடாவில் அதிமுக வினர் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • 13:28 (IST) 03 Apr 2021
    பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு!

    சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில், குஷ்பு வழிபாட்டுத் தலங்கலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அனுமதி வழங்காத இடங்களில் பிரசாரம் செய்ததற்காக, ஆயிரம் விளக்கு காவல்துறையினர், குஷ்பு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • 13:20 (IST) 03 Apr 2021
    தேனி ஜெயலலிதா பேரவை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

    தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சிமணி மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தரஞ்சன் ஆகியோர், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போடி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இருவரின் இல்லத்திலும் வருவான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், சித்தரஞ்சன் இல்லத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

  • 13:12 (IST) 03 Apr 2021
    வாக்களிக்க கூறி பணப்பட்டுவாடா; 2 அதிமுக பிரமுகர்கள் கைது

    உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கத்தில், வாக்களிக்க கூறி அதிமுக வினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தனக்காவூர் அதிமுக பிரமுகர் வேங்கப்பனிடமிருந்து 20000 ரூபாய் கைப்பற்றப்பட்டதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின் கைது செய்யப்பட்டார். அதேபோல, ஒரகடம் பகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ராமதாஸையும் காவல் துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • 13:01 (IST) 03 Apr 2021
    விவேகானந்தர் சிலையை ஹெலிஹாப்டரில் இருந்து படம் பிடித்த மோடி!

    கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலையை கண்ட நெகிழ்ச்சியில், ஹெலிகாப்டரில் இருந்த படியே படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.

  • 12:52 (IST) 03 Apr 2021
    பிரபல மதுபான குழுமத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை தயாரித்து விநியோகம் செய்து வரும் பிரபல எஸ்என்ஜி மதுபான குழுமத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர், இக்குழுமத்தின் தலைவர் ஜெயமுருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இவரது இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • 12:43 (IST) 03 Apr 2021
    ஆயிரம் விளக்கு தொகுதியில் அமித் ஷா : குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை அடுத்து, நட்சத்திரங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, பிரமாண்ட பேரணியிலும் பங்கு பெற்று வருகிறார்.

  • 12:42 (IST) 03 Apr 2021

  • 12:10 (IST) 03 Apr 2021
    கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி : பிரசாரம் ரத்து

    திமுக மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கனிமொழி திமுக பிரசாரத்தின் தெற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பால் அவரது பிரசாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • 12:00 (IST) 03 Apr 2021
    வருமானவரித்துறை சோதனையில் எதுவும் சிக்கவில்லை : மு.க.ஸ்டாலின்

    வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் அவர் பேசுகையில், திமுக பிரமுகர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் எதுவும் சிக்கவில்லை’, என்றார். மேலும், பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இனையம் துறைமுகம் திட்டத்தில், பிரதமரும் முதலமைச்சரும் மீனவர்களை ஏமாற்றி வருவதாக சாடினார்.

  • 11:57 (IST) 03 Apr 2021

  • 10:14 (IST) 03 Apr 2021
    நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 89,129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 24 மணி நேரத்தில் 714 பேர் உயிரிழந்துள்ளனர். 7.30 கோடி நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • 10:02 (IST) 03 Apr 2021
    ஓ.பி.எஸ். அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை

    துணை முதல்வர் ஓ.பி.எஸ். அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள வி. கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  • 09:35 (IST) 03 Apr 2021
    மாலை முரசு வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்

    திமுக 151 இடங்களிலும், அதிமுக 54 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும், கடும் சவால் நிறைந்த தொகுதிகளாக 27 தொகுதிகள் இருக்கும் என்று மாலைமுரசு வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  • 09:11 (IST) 03 Apr 2021
    ரஜ்ஜௌரியில் பனிப்பொழிவு

    ரஜ்ஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணமாக முகல் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அந்த பனியை அகற்றும் காட்சிகள். இந்த சாலை காஷ்மீரின் தெற்கே உள்ள சோபியன் மாவட்டத்தை பூன்ச் மற்றும் ரஜ்ஜௌரியுடன் இணைக்கிறது.

    watch: Snow clearance underway on Mughal road near Pir Panjal Mountain Range in Rajouri district. Following fresh snowfall, Mughal road, which connects South Kashmir's Shopian district to Rajouri and Poonch, has been covered with thick layers of snowjammuandkashmir pic.twitter.com/5xhCuz62Lu

    — ANI (@ANI) April 3, 2021

  • 08:54 (IST) 03 Apr 2021
    அண்ணாமலைக்கு தொடரும் எதிர்ப்புகள்

    எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது அது கர்நாடக முகம் என்று பேசிய அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும், மாநில பாஜக துணைத்தலைவருமான அண்ணாமலை கூறியதை கண்டித்து ஏற்கனவே கனிமொழி கண்டனங்களை பதிவு செய்த நிலையில் “அடக்கிப் பேசுங்கள்” என்று சுபவீ டீவீட் வெளியிட்டுள்ளார்.

    "எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம் " -அண்ணாமலை IPS. எங்களுக்கு எப்போதும் ஒரே முகம்தான். அது தமிழ் முகம்! கனிவான முகம், ஆனால் கயவர்களைக் கண்டு அஞ்சாத முகம். பார்வையிலேயே எதிரிகளைப் பந்தாடும் முகம். அடக்கிப் பேசுங்கள் அண்ணாமலை !annamalai_ips

    — SubaVeerapandian (@Suba_Vee) April 3, 2021

  • 08:51 (IST) 03 Apr 2021
    சென்னையில் பெட்ரோல் விலை

    சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ 92.58-க்கும், டீசல் ரூ 85.88-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • 08:50 (IST) 03 Apr 2021
    தமிழகத்தில் அனல் காற்று வீசும்

    தமிழகத்தில் நேற்று 10க்கும் அதிகமான இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசுவது தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

  • 08:50 (IST) 03 Apr 2021
    புதுவையில் ஊரடங்கு உத்தரவு

    சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் நாளை இரவு 7 மணி முதல் 7ம் தேதி காலை 7 மணி வரை கூட்டமாக செல்லுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல், ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது, இரு சக்கர வாகனங்களில் பேரணி செல்வது போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment