சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக அரசின் கடைசி கட்டத்தில் 2 அறிவிப்புகள் அதற்குப் பயணளிப்பதாகத் தெரிகிறது: கூட்டுறவு வங்கிகளில் தொழிற்சங்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய ரூ.2 லட்சம் வரை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக்கடன் பிரிவில் பெற்ற ஆறு சவரன் வரை நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்த தள்ளுபடி அறிவிப்புகள் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளால் வரவேற்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளால் உணவு வழங்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் பொதுமுடக்கத்தால் சந்தைகள் தடம் புரண்டுள்ளது. அதனா, தமிழக அரசு ரூ.12,110 கோடி மதிப்புள்ள விவசாயக் கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 16 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசு கூறுகிறது.
ரூ .1 லட்சம் கடன் வாங்கிய தமிழக வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.அஜிதன் கூறுகையில், “பல விவசாயிகள் பல மாதங்களாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. வட்டி அதிகரித்து வருகிறது. கடன் தள்ளுபடி நிச்சயமாக அதிமுகவுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது அறுவடைக்கு 4,000 வாழை மரங்கள் தயாராக இருந்ததாக அஜிதன் கூறுகிறார். “அறுவடையில் சுமார் ரூ.8 லட்சம் வருமானம் எதிர்பார்த்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததெல்லாம் வெறும் ரூ.80,000 தான்” என்கிறார்.
மேலும், நகைக் கடன் தள்ளுபடியிலிருந்து யார் பயனடைவார்கள் என்பது குறித்த தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால், “நூற்றுக்கணக்கானவர்கள் நகைகளை அடகு வைக்க விரைந்துள்ளனர். இது உண்மையில், தேர்தலில் அதிமுகவுக்கு உதவப் போகிறது” என்று கூறுகிறார்.
தேனியைச் சேர்ந்த ஒரு பெரிய வாழை விவசாயி எல்.அப்பாஸ் கூறுகையில், அரசாங்கத்தின் முடிவு இன்னும் அனைத்து நகர்ப்புற கூட்டுறவு பிரிவுகளையும் எட்டவில்லை. “ஒரு தெளிவான முயற்சியாக, இந்த தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தேவை. இதில் குழப்பம் உள்ளது” என்று கூறுகிறார்.
ஜனவரி மாதம் இதேபோன்ற தள்ளுபடிகளுக்கு திமுக வாக்குறுதியளித்தது. இந்த நடவடிக்கை அதிமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தவிர்ப்பதற்கு போதுமான வாக்குகளை பெறாது என்று திமுக நம்புகிறது.
இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு அதிமுகவினருக்கு ஆதரவான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தஞ்சாவூரில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மாநில விவசாய நிலங்களில் 40% பங்கைக் கொண்ட டெல்டா பகுதிகளில் ரூ.1,135 கோடி மதிப்புள்ள கடன் தள்ளுபடிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்று கூறுகிறார். அதே நேரத்தில், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் (பழனிசாமி மற்றும் பல அதிமுக அமைச்சர்களின் ஆதரவு தளமான மேற்கு மாவட்டங்கள்) ரூ.2,500 கோடி பெற்றுள்ளனர். “மொத்த மேற்கு மண்டலத்திற்கும் ரூ.12,110 கோடி தள்ளுபடியில் சுமார் 7,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது” என்று பி.ஆர்.பாண்டியன் கூறுகிறார்.
அரசியல் கட்சிகள் இதுபோன்ற அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்னதாகத்தான் வெளியிடுகின்றன என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மன்னர்குடி எஸ்.ரங்கநாதன் கூறுகிறார். “உண்மையில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கம் இருந்தால், தனியார், மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறுகிறார்.