/tamil-ie/media/media_files/uploads/2021/04/DSC_6481.jpg)
Tamil Nadu Assembly Elections 2021 Thanthi TV opinion poll results : மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை 48 ஆயிரம் நபர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை முழுமையாக வெளியிட்டுள்ளது தந்தி டிவி. முதலமைச்சர் தேர்வாக யார் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ஸ்டாலினுக்கு 46% மக்களும், ஈ.பி.எஸ்க்கு 40% மக்களும், கமல் ஹாசனுக்கு 5% மக்களும், சீமான் மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு 4% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 124 தொகுதிகளிலும், அதிமுக 52 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறிய கருத்துக்கணிப்பு முடிவுகள், கடும் போட்டிகள் 58 இடங்களில் நிகழலாம் என்றும் கூறியுள்ளது.
மண்டலவாரியாக முடிவுகள் அறிவிப்பு
சென்னை, தெற்கு, மேற்கு, வடக்கு மண்டலங்களில் அமைந்திருக்கும் மாவட்டங்கள் தோறும் அமைந்துள்ள தொகுதிகளில் வெற்றியை பெற இருப்பது யார் என்பதையும், டெல்டா மாவட்டங்களில் வெற்றி யாருக்கு என்றும் நேற்றைய முழுமையான நிகழ்ச்சியில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த 5 நாட்களாக நாள் ஒன்றுக்கு 50 தொகுதிகள் வீதம் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வந்தது தந்தி தொலைக்காட்சி.
புதிய தலைமுறை, மாலை முரசு டிவி, மற்றும் தந்தி என்று தமிழகத்தின் மிக முக்கியமான ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுக ஆட்சியை கைப்பற்றும் என்பதையே காட்டுகிறது. எது எவ்வாறாக இருப்பினும் மே 2ம் தேதி அன்று தான் தமிழகத்தின் முதல்வர் யார் என்பதை உறுதியாக கூற முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.