ஆண்களுக்கு நிகராக துணிச்சலுடன் களம் இறங்கிய பெண்கள்; வெற்றி வாகை சூடுபவர்கள் யார்?

முன் மாதிரி அரசியல் களமாக பெண்களின் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி வெகு காலமாக செயல்பட்டு வருகிறது.

Tamil Nadu Assembly Elections 2021 women candidates

179 இடங்களில் போட்டியிட்டுள்ள அதிமுக சார்பில் இம்முறை 14 பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா போன்றோருக்கு இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன் கோவில் தனித்தொகுதியில் போட்டியிட்டார். சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஆலந்தூரில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, கட்சியின் செயற்குழு உறுப்பினர் கணிதா சம்பத் செய்யூர் தனி தொகுதியில் போட்டியிட்டனர்.

மேலும் படிக்க : Tamil Nadu Election Results 2021 Live: பின்னடைவை சந்திக்கும் துரைமுருகன்

மேலும் மதுராந்தகம் தனி தொகுதியில் முன்னாள் எம்.பி. மரகதம் குமாரவேல், எம்.எல்.ஏ. சித்ரா, பொதுக்குழு உறுப்பினர் பொன். சரஸ்வதி, ஜெயபாரதி கந்தர்வ கோட்டை தொகுதி, குடியாத்தம் தனி தொகுதியில் பரிதா, விருதுநகர் தொகுதியில் லட்சுமி கணேசன், முதுகுளத்தூரில் கீர்த்திகா முனுசாமி, ஓசூர் தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ தேன்மொழிக்கு இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்

திமுக சார்பில் 11 பெண் வேட்பாளர்கள் இம்முறை களம் கண்டனர். அதில் ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடியில் பி.கீதாஜீவன், மதுரை மேற்கில் சி. சின்னம்மாள், மானா மதுரை (தனி) தொகுதியில் ஆ.தமிழரசி ஆகியோர் போட்டியிட்டனர். அதே போன்று கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் க. சிவகாமசுந்தரி, தாராபுரம் (தனி) தொகுதியில் கயல்விழி செல்வராஜ், மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன், கெங்கவல்லி தொகுதியில் ஜெ. ரேகா பிரியதர்ஷினி, திண்டிவனம் (தனி) தொகுதியில் பி. சீத்தாபதி சொக்கலிங்கம், குடியாத்தம் (தனி) தொகுதியில் வி. அமலு மற்றும் செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் போட்டியிட்டனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி களம் இறக்கியது.

பாஜக வேட்பாளர்கள்

அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டது பாஜக. அதில் 3 பெண்களு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிட்டார். கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். மொடக்குறிச்சியில் டாக்டர் சி.கே. சரஸ்வதி போட்டியிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

மக்கள் நீதி மய்யம்

154 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள மக்கள் நீதிமய்யம் கட்சியில் பத்மபிரியா (மதுரவாயல்), பிரியதர்ஷினி(எழும்பூர் தனித்தொகுதி), ஸ்நேகபிரியா(சைதாப்பேட்டை), லாவண்யா (திருப்போரூர்), ஷகிலா (பென்னாகரம்), அனுஷ்யா (மேட்டூர்), அனுஷா ரவி (திருப்பூர் தெற்கு), உமாதேவி (அருப்புக்கோட்டை), லத்தீஸ் மேரி (கொளச்சல்), மைலாப்பூர்(ஸ்ரீப்ரியா சேதுபதி), சாந்தா (பாபநாசம் தொகுதி ), ரேவதி மணிமேகலை (பூந்தமல்லி), ஸ்ரீநிதி (உடுமலைப்பேட்டை) ஆகிய பெண்கள் போட்டியிட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி

முன் மாதிரி அரசியல் களமாக பெண்களின் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி வெகு காலமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது போன்றே இம்முறையும் அக்கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 50% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டார்.

15வது சட்டமன்றம் Vs 16வது சட்டமன்றம்

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் 17 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். 2016ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள் நீங்களாக அன்று 232 தொகுதிகளில் இந்த எண்ணிக்கை வெறும் 9% மட்டுமே. அந்த 21 நபர்களில் 16 பெண்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் 4 பேர் திமுகவை சேர்ந்தவர்கள். காங்கிரஸின் விஜயதரணியும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu assembly elections 2021 women candidates

Exit mobile version