Tamil nadu by-election candidates campaign: தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamil nadu by-election candidates campaign:
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 4 தொகுதியின் இடைத்தேர்தல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுடன்.
தமிழகத்தில் உள்ள 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட்டது.
4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் தங்களின் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர். மே 1ம் தேதி முதல்வர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.
Highlights