4 தொகுதிகளின் இடைத்தேர்தல்: முதல்வரின் பிரச்சாரம் எப்போது ஆரம்பம் ?

மே 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வருகின்ற மே 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

By: Apr 25, 2019, 6:20:46 PM

Tamil nadu by-election candidates campaign: தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil nadu by-election candidates campaign:

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 4 தொகுதியின் இடைத்தேர்தல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள இணைந்திருங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுடன்.

Live Blog
தமிழகத்தில் உள்ள 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட்டது.
12:46 (IST)25 Apr 2019
சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் தன்னுடைய வேட்புமனுவை இன்று  தாக்கல் செய்தார்

11:06 (IST)25 Apr 2019
திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சார விபரம்

ஸ்டாலினின் சுற்றுப்பயண விபரம்

11:06 (IST)25 Apr 2019
திமுக வேட்பாளர்கள்

அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம் - டாக்டர் பி. சரவணன்
சூலூர் - பொங்கலூர் ந.பழனிச்சாமி
ஒட்டப்பிடாரம் (தனி தொகுதி) - எம்.சி. சண்முகையா

11:03 (IST)25 Apr 2019
அமமுக வேட்பாளர்கள்

சூலூர் - கே.சுகுமார்
அரவக்குறிச்சி - சாகுல் ஹமீது
திருப்பரங்குன்றம் - ஐ. மகேந்திரன்
ஒட்டபிடாரம் - ஆர். சுந்தரராஜ்

11:02 (IST)25 Apr 2019
அதிமுக கட்சி வேட்பாளர்கள்

சூலூர் - வி.பி. கந்தசாமி
அரவக்குறிச்சி - செந்தில்நாதன்
திருப்பரங்குன்றம் - முனியாண்டி
ஒட்டப்பிடாரம் - மோகன்

11:02 (IST)25 Apr 2019
நாம் தமிழர்கள் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம் - ரா. ரேவதி
ஒட்டப்பிடாரம் - மு. அகல்யா
சூலூர் - வெ. விஜயராகவன்
அரவக்குறிச்சி - பா.க.செல்வம்

11:02 (IST)25 Apr 2019
முதல்வரின் சுற்றுப்பயண விபரம்

மே 1ம் தேதி சூலூர் தொகுதியிலும், 5ம் தேதி அரவக்குறிச்சியிலும் 6ம் தேதி திருப்பரங்குன்றத்திலும் 7ம் தேதி ஒட்டப்பிடாரத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.  மீண்டும் 11ம் தேதி திருப்பரங்குன்றத்திலும், 12ம் தேதி ஒட்டப்பிடாரத்திலும் 13ம் தேதி அரவக்குறிச்சியிலும், 14ம் தேதி சூலூர் தொகுதியிலும் முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் தங்களின் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர். மே 1ம் தேதி முதல்வர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.

Web Title:Tamil nadu by election candidates campaign live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X