TN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்?

Tamil Nadu Assembly By Election Result 2019: அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் 4 முதல் 8 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும்...

Tamil Nadu Assembly By Election Result Live Telecast Online : 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் 18 தொகுதிகளுக்கான தேர்தல்கள் ஏப்ரம் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்தல் அட்டவணைகள் மார்ச் மாதம் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளான அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் ஏப்ரல் மாதம் 09ம் தேதி அறிவிக்கப்பட்டது.

பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிபட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  மீதம் உள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல்கள் 7ம் மற்றும் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்ற மே 19ம் தேதி நடத்தப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டா ?

235 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழக சட்டசபையில் 118 இடங்களை கைப்பற்றுபவர்கள் வெற்றி பெறுபவர்கள் ஆட்சியை தக்க வைக்கின்றனர். 2016ம் ஆண்டு 135 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது அதிமுக.

திமுக மற்றும் அதன் கூட்டணிகள் என 98 இடங்களை தக்கவைத்துள்ளது திமுக. இம்முறை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 20 இடங்களைக் கைப்பற்றினால் மட்டுமே திமுக ஆட்சி அமைக்கும். அமமுகவின் உதவியோடு ஆட்சி அமைக்க திமுக முயற்சிக்கலாம் என்றும் பவரலாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலவுகின்றன.

அதிமுகவின் நிலை

135 பேராக இருந்த அதிமுக அணியில், முதல்வர் ஜெயலலிதா மரணமடைய கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. 19 எம்.எல்.ஏக்கள் அமமுகவிற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மனுக்கள் அளித்தனர்.

அதிமுக கொறடா ராஜேந்திரன், இந்த 19 பேரில் தகுதி நீக்கத்திற்கு பரிந்துரை செய்தார். விளக்கம் கேட்டு சபாநாயகர் பி. தனபால் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதில் எஸ்.டி.கே ஜக்கையனின் விளக்கம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட, 18 நபர்களையும் எம்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை பிறகு 117 ஆக குறையத் துவங்கியது.

திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ ஏ.கே. போஸ் மற்றும் சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் உயிரிழக்க அதிமுகவின் பலம் 115 ஆக குறைந்துவிட்டது. தற்போது விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அமமுகவிற்கு ஆதரவு அளித்து வருகிறனர் என்று கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ய, விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பினார் தனபால். ஆனால் உச்ச நீதிமன்ற உதவியுடன் அதிமுக ஆதரவாளர்களாக தங்களை காண்பித்து வருகின்றார்கள்.

நிலையான ஆட்சியை அதிமுக தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் 4 முதல் 8 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிலையில் வெளியாக உள்ளது 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்.

22 தொகுதிகளில் களம் இறங்கிய கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலைப் படிக்க

Tamil Nadu By Election Result Live Streaming

நாளை காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை துவங்கிவிடும். நாளை காலையில் இருந்து தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள தொடர்ந்து தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்துடன் இணைந்திருங்கள். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அப்டேட்டுகளையும் நீங்கள் இங்கு  அறிந்து கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close