Advertisment

தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் இடைத்தேர்தல் முடிவுகள்... போர்களம் கண்ட 22 தொகுதிகளின் பட்டியல்!

Full Constituencies List of Tamil Nadu Assembly By Election: இந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu By Election Results, Full Constituencies List

Tamil Nadu 22 Constituency by-election

Tamil Nadu By Election Results, Full Constituencies List : சட்டமன்ற உறுப்பினர்களின் மரணம், மற்றும் கட்சி தாவலின் காரணமாக பதவி பறிப்பு போன்ற நிகழ்வுகளால் தமிழகத்தில் 22 சட்டமன்ற இடங்கள் காலியாகின. அதில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மாதம் 18ம் தேதி (ஏப்ரல் 18) அன்று நடத்தப்பட்டது.

Advertisment

மீதம் இருந்த நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல் நடைபெற்ற மே 19ம் தேதி சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் அனைத்தும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே நாளில் வெளியிடப்படும். இதன் மூலம் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu By Election Results, Full Constituencies List : 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் ஏன் ?  

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி ஆளுநரிடம் புகார் மனுக்கள் அளித்தனர் 18 அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார் சட்டப்பேரவை தலைவர் தனபால்.  முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவருமாக இருந்த கலைஞரின் மரணத்தை தொடர்ந்து திருவாரூர் தொகுதி சீட் காலியானது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதியும் காலியானது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி, ஒசூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர். பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மார்ச் 20ம் தேதி காலமானார். அதனால் அங்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது.

22 தொகுதிகளில் ஏன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது? தேர்தலுக்கு முன்பு இங்கு யார் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்? முக்கியமான கட்சிகளில் இருந்து களம் இறங்கிய வேட்பாளர்கள் யார் யார் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

Tamil Nadu By Election Results, Full Constituencies List வேட்பாளர்கள் பட்டியல் ஒரு பார்வை

1. பெரம்பூர்

பி. வெற்றிவேல் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த காரணத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் இவரும் ஒருவர். தற்போது அமமுக சார்பில் அவர் போட்டியிடுகிறார். வெறும் 519 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவைச் சேர்ந்த தனபாலனை தோற்கடித்து வெற்றி பெற்றார் வெற்றிவேல். தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக - ஆர்.டி.சேகர்

அதிமுக - ஆர்.எஸ்.ராஜேஷ்

அமமுக - வெற்றிவேல்

இந்த தொகுதியில் மட்டுமே 40 பேர் போட்டியிட்டுள்ளனர்.

2. திருப்போரூர்

எம்.கோதண்டபாணி இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்தவர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக மாறிய பின்பு, இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுகவை சேர்ந்த விஸ்வநாதனை 950 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டசபை சென்ற இவர் தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக - இதயவர்மன்

அதிமுக - ஆறுமுகம்

அமமுக - கோதண்டபாணி

3. சோளிங்கர்

என்.ஜி. பார்த்திபன்  இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2016ம் ஆண்டு தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முனிரத்தினத்தை 9732 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்து எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

திமுக - அசோகன்

அதிமுக - சம்பத்

அமமுக - மணி

4. குடியாத்தம்

அமமுக தரப்பில் தற்போது போட்டியிடும் ஜெயந்தி பத்மநாபன் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 18 தொகுதிகளில் போட்டியிடும் ஒரே அமமுக உறுப்பினர் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு தேர்தலில் 11470 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாகை சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக - காத்தவராயன்

அதிமுக - மூர்த்தி

அமமுக - ஜெயந்தி பத்மநாபன்

5. ஆம்பூர்

ஆர். பாலசுப்ரமணி 2016ம் ஆண்டு தேர்தலின் போது இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 28006 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார் பாலசுப்ரமணி.

திமுக - விஸ்வநாதன்

அதிமுக - ஜோதி ராமலிங்க ராஜா

அமமுக - பாலசுப்ரமணி

6. ஓசூர்

ஒசூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக செயல்பட்டு வந்தவர் பாலகிருஷ்ணன் ரெட்டி. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மீது நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் கோபிநாத்தை எதிர்த்து போட்டியிட்ட இவர் 22964 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக - சத்யா

அதிமுக - ஜோதி

அமமுக - புகழேந்தி

7.பாப்பிரெட்டிபட்டி

பி.பழனியப்பன் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சராக பணியாற்றிய இவர் இந்த தொகுதியில் 12713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக இங்கு இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

திமுக - மணி

அதிமுக - கோவிந்தசாமி

அமமுக - ராஜேந்திரன்

8.அரூர் 

இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் முருகன். அதிமுக சார்பில் போட்டியிட்டு 11421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் முருகன். தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.  

திமுக - கிருஷ்ண குமார்

அதிமுக - சம்பத் குமார்

அமமுக - முருகன்

9. நிலக்கோட்டை

ஆர். தங்கதுரை இந்த தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 14776 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்த தொகுதியின் அமமுக வேட்பாளராக தற்போது இவர் களம் இறங்கியுள்ளார்.

திமுக - சௌந்தர பாண்டியன்

அதிமுக - தேன்மொழி

அமமுக - தங்கதுரை

10. திருவாரூர்

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி இங்கு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை 68366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தன்னுடைய இறுதி சட்டமன்ற தேர்தலிலும் சாதனை புரிந்தார்.

திமுக - பூண்டி கலைவாணன்

அதிமுக -  ஜீவானந்தம்

அமமுக - எஸ்.காமராஜ்

11. தஞ்சாவூர்

2016ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கிய விவகாரத்தின் காரணமாக இங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தான் மீண்டும் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி வாரியாக வேட்பாளர்களின் பட்டியல் கீழே.

திமுக - நீலமேகம்

அதிமுக - காந்தி

அமமுக - ரெங்கசாமி

12. மானாமதுரை

எஸ். மாரியப்பன் கென்னடி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2016ம் ஆண்டு தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவை விட 14889 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார். தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார் அவர்.

திமுக - இலக்கிய தாசன்

அதிமுக - நாகராஜன்

அமமுக -  மாரியப்பன் கென்னடி

13. ஆண்டிபட்டி

இந்த தொகுதியின் வேட்பாளராக செயல்பட்டு வந்தவர் அதிமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன். டிடிவி ஆதரவு எம்.எல்.ஏவாக மாறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் தேனி தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 30196 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக - மகாராஜன்

அதிமுக - லோகிராஜன்

அமமுக - ஜெயக்குமார்

14. பெரியகுளம் 

கே. கதிர்காமு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்டு 14350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிடிவி ஆதரவு எம்.எல்.ஏவாக மாறியதால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். 2009ம் ஆண்டு பெரியகுளம் தனித்தொகுதியாக அறிவிக்கப்படும் முன்பு வரை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியாக இது இருந்தது. 

திமுக - சரவணகுமார்

அதிமுக - முருகன்

அமமுக - கதிர்காமு

15. சாத்தூர்

எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தர, பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமமுக சார்பில் மீண்டும் களம் காணும் இவர் 4427 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்தமுறை வெற்றி பெற்றார்.

திமுக - ஸ்ரீனிவாசன்

அதிமுக - ராஜவர்மன்

அமமுக - சுப்பிரமணியன்

16. பரமக்குடி

எஸ். முத்தையா இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

திமுகவின் திசைவீரனை விட 11389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் முத்தையா என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக - சம்பத் குமார்

அதிமுக - சாதன பிரபாகர்

அமமுக - முத்தையா

17.விளாத்திக்குளம்

இந்த தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் உமா மகேஸ்வரி ஆவார். கடந்த முறை தேர்தலில் இவர் 18718 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பீமராஜவை தோற்கடித்தார். அமமுக சார்பில் தற்போத் ஜோதிமணி என்பவர் களம் இறங்கியுள்ளார் இடைத்தேர்தலில்.

திமுக - ஜெயக்குமார்

அதிமுக -  சின்னப்பன்

அமமுக - ஜோதிமணி

18. பூந்தமல்லி

டி.ஏ. ஏழுமலை இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக முதலில் தேர்வு செய்யப்பட்டார். கட்சி தாவலின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார். 11763 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

திமுக - கிருஷ்ணசாமி

அதிமுக -  வைத்தியநாதன்

அமமுக - ஏழுமலை

மேலே கூறப்பட்டிருக்கும் 18 தொகுதிகளுக்கான தேர்தல்களும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ம் தேதி நடைபெற்றது.

 19.சூலூர்

கோவை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மார்ச் மாதம் 20ம் தேதி மாரடைப்பால் மரணமடைய அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அமமுக - சுகுமார்

அதிமுக - வி.பி. கந்தசாமி

திமுக -  பொங்கலூர் பழனிச்சாமி

20.அரவக்குறிச்சி

அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர் பின்னர் திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

அமமுக - சாகுல் ஹமீது

அதிமுக - வி.வி.செந்தில் நாதன்

திமுக - செந்தில் பாலாஜி

21.திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

அமமுக - மகேந்திரன்

அதிமுக - எஸ். முனியாண்டி

திமுக - டாக்டர் சரவணன

22. ஒட்டப்பிடாரம்

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுந்தர் ராஜன். பின்னர் கொறடா நோட்டீஸ் கொடுக்கப்பட்டு பதிவு நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அதே தொகுதியில் அமமுக சார்பில் அவர் போட்டியிடுகிறார். 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

அதிமுக - பெ.மோகன்

அமமுக - சுந்தரராஜ்

திமுக - சண்முகையா

மேலும் படிக்க : தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்றால் என்ன?

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment