Exit Polls 2019 India: Exit Poll என அழைக்கப்படும் வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. கடைசி கட்டத் தேர்தல் நாளில் (மே 17) வாக்குப் பதிவு முடிந்து அரை மணி நேரத்திற்கு பிறகு இதை வெளியிடலாம். இது நம்பகமானதா? இதை எப்படி எடுக்கிறார்கள்? என்பது குறித்து ஒரு பார்வை..
பல சர்ச்சைகளை உள்ளடக்கிய 7 கட்டங்களை கொண்ட மக்களவை தேர்தல் 2019 இன்று(மே.19) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று மாலை வெளியானது. தேர்தல் முடிவுகள் மே 23ல் வெளியாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/z690-300x217.jpg)
Lok sabha elections exit poll: எக்ஸிட் போல் முடிவுகள்
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது, வாக்காளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்த பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பு ஆகும். எந்த அரசு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது குறித்து இதில் கணிக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் 'யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கப்படும், ஆனால் இதில், 'யாருக்கு வாக்களித்தீர்கள்?' என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் வெளியிடப்படும். பல நிறுவனங்களின் சார்பில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படும்.
மேலும் படிக்க: 2019 Lok Sabha Election Exit Poll Live: எக்ஸிட் போல் முடிவுகள்… பெரும்பான்மை பெறுகிறது பாஜக!
கடந்த 2004ம் ஆண்டு ஆறு தேசிய கட்சிகள் மற்றும் 18 மாநில கட்சிகளின் ஒப்புதலோடு, சட்டத்துறை அமைச்சகத்திடம் ஒட்டுமொத்தமாக தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டாலும், பிப்ரவரி 2010ம் ஆண்டு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மட்டும் பிரிவு 126(A) படி தடை விதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Lok Sabha Election 2019 Exit Poll
இருப்பினும், கருத்துக் கணிப்புகள் ஒரு சார்பாக இருப்பதாகவும், போட்டியாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான கணிப்புகளை கொடுப்பதாகவும் என்று அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் மீதான தடை இன்று(மே.19) மாலை 6.30 மணிக்கு மேல் நீக்கப்பட்டது.
மேலும் படிக்க: Tamil Nadu Lok Sabha Election 2019 Exit Poll: எக்ஸிட் போல் முடிவுகளில் அள்ளுகிறது திமுக
தடை செய்யப்பட்டிருக்கும் காலத்தில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்த எந்த செய்திகளையும் வெளியிட வேண்டாம் என காட்சி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: Exit Poll Results 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் எக்ஸிட் போல் முடிவுகள்
தடை காலத்தில் எந்தவிதமான கணிப்புகளுக்கும் இங்கே இடமில்லை. ஜோதிடர்கள், அரசியல் வல்லுனர்கள், தனி நபர் என யாராக இருந்தாலும், 126A பிரிவின் படி, கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
நடப்பு தேர்தலில், மே 19 மாலை வரை வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை அமலில் உள்ளது. 11.04.2019 காலை 7 மணியிலிருந்து, 19.05.2019 மாலை 6.30 மணி வரை, மின் ஊடகம், அச்சு ஊடகம் என யாருக்கும் Exit Polls வெளியிட அனுமதி இல்லை.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் நம்பகத்தன்மை அற்றவை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. பல முறை தேர்தல் முடிவுகள் தவறாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை அச்சு ஊடகங்களிலோ, காட்சி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.