Exit Poll for Tamil Nadu Lok Sabha Election 2019: ஏழாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை பிரபல ஊடகங்கள் நேற்று (190/05/2019) வெளியிட்டன. அதிமுக கடந்த முறை பெரும்பான்மை பெற்றது போல் இம்முறை பெரும்பான்மை பெறுமா அல்லது திமுகவின் அதிகாரம் ஓங்குமா என்பதை தெள்ளத்தெளிவாக முடிவுகள் அறிவித்தன.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் டைம்ஸ் நவ், இந்தியா டுடே கணிப்புகளில் திமுக அதிக இடங்களைப் பெற்றது. என்.டி.டிவி., நியூஸ் நேஷன் கணிப்புகளில் அதிமுக அணி கணிசமான இடங்களை பெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இறுதிகட்ட வாக்குப் பதிவு இன்று (மே 19) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, நாடு முழுவதும் அனைத்துத் தொகுதிகளின் வாக்குப் பதிவு முடிந்த பிறகுதான் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியும்.
மேலும் படிக்க: 2019 Lok Sabha Election Exit Poll Live: எக்ஸிட் போல் முடிவுகள்… பெரும்பான்மை பெறுகிறது பாஜக!
அந்த வகையில் தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் எடுத்த எக்ஸிட் போல் முடிவுகளை இன்று (மே 19) மாலை 6.30 மணிக்கு மேல் வெளியிட்டன. தமிழ் நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப் பரிமாற்றம் காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. அதைத் தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுவையில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மேலும் படிக்க: Exit Poll Results: ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் நிஜமாகுமா? ஒரு பார்வை
இந்தத் தொகுதிகளுக்கான எக்ஸிட் போல் முடிவுகளில் முந்தியது யார்? என்பது தொடர்பான ரிப்போர்ட் இது:
Exit Poll 2019 Tamil Nadu Results: தமிழ்நாடு கருத்துக் கணிப்புகள்:
இந்தியா டுடே
திமுக கூட்டணி : 34 முதல் 38
அதிமுக கூட்டணி : 0 முதல் 4
டைம்ஸ் நவ்
திமுக கூட்டணி : 29
அதிமுக கூட்டணி : 09
நியூஸ் எக்ஸ்
திமுக அணி : 34 முதல் 38
அதிமுக அணி: 0 முதல் 4
மற்றவை : 1
நியூஸ் 24- டுடேஸ் சாணக்யா
திமுக அணி : 31
அதிமுக அணி: 6
மற்றவை : 1
என்.டி. டிவி
திமுக கூட்டணி : 25
அதிமுக கூட்டணி : 11
மற்றவை : 02
நியூஸ் நேஷன்
திமுக கூட்டணி : 23
அதிமுக கூட்டணி : 15
சி.என்.என்.- நியூஸ்
திமுக கூட்டணி : 22 முதல் 24
அதிமுக கூட்டணி : 14 முதல் 16
இந்தியா டி.வி.
திமுக - 20
அதிமுக - 10
காங்கிரஸ் - 06
பாஜக -02
ரிப்பப்ளிக்- சி வோட்டர்
திமுக கூட்டணி : 27
அதிமுக கூட்டணி : 11
கடந்த 2014 தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்தத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளில் அதிமுக.வுக்கு மிக அதிகபட்சமாக 16 தொகுதிகளே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதாக தெரியவில்லை.