தமிழக தேர்தல் 2021 : கோவில்பட்டியில் வெற்றி யாருக்கு?

கடந்த 20 ஆண்டுகளாக நான் வசித்து வரும் தெருவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்கள் தெருவில் விளக்குகள் கூட இல்லை.

கடந்த 20 ஆண்டுகளாக நான் வசித்து வரும் தெருவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்கள் தெருவில் விளக்குகள் கூட இல்லை.

author-image
WebDesk
New Update
Tamil Nadu elections 2021 TTV hoped seat in bag CPM man with jhola stands in the way

Arun Janardhanan

Tamil Nadu elections 2021 TTV hoped seat in bag CPM man with jhola stands in the way : கோவில்பட்டி விநாயகர் கோவிலில் பூவிற்றுக் கொண்டிருக்கும் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இதுநாள் வரையில் எம்.ஜி.ஆர் கட்சிக்கே வாக்களித்ததாக கூறியுள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி. அதிமுகவில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் வாக்கெடுப்புகளை காட்டிலும் இந்த பகுதியில் அதிக பங்கினை கொண்டிருக்கிறார். கடம்பூர் ராஜூ அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த பெண் வாக்காளரும் கோவில்பட்டியில் உள்ள பலரும் மூன்றாவது வேட்பாளர் குறித்து யோசித்து வருகின்றனர்- சுயமாக செயல்படும் கே ஸ்ரீனவாசன், திமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் சிபிஎம் அளித்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி போட்டியிடுகிறார். இந்த பகுதியில் மிக நீண்ட காலமாக அமைதியாக வேலை பார்த்து வருகிறார்.

 தினகரன் குறித்து கேட்ட போது, பெயர் கூற விரும்பாத கடை உரிமையாளர் ஒருவர், கடந்த வாரம் தான் அவர் வந்தார். கோவில்பட்டியில் எந்த பங்களிப்பும் இல்லாமல் அவரால் எப்படி வெற்றி பெற முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisment
Advertisements
publive-image

அதிமுகவிற்கு வெகுநாட்களாக வாக்களித்து வந்த வாக்களர் ஒருவர் தன்னுடைய நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறிவிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நான் வசித்து வரும் தெருவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எங்கள் தெருவில் விளக்குகள் கூட இல்லை. இந்த தலைவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை குறிப்பாக ஜெயலலிதா இறந்த பின்பு தற்போது இங்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்று உணருகின்றோம். எங்களுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார் சீனிவாசன் அவர் தன்னுடைய பழைய துணிப்பையை கூட மாற்றவில்லை என்று சிரித்த வண்ணம் கூறுகிறார்.

வறண்ட பகுதியான கோவில்பட்டி அதன் சுவையான கடலைமிட்டாய்க்காக பெயர்பெற்றது. அருகில் இருக்கும் சிவகாசியின் விரிவாக்கமாக இங்கு பெரிய அளவில் பட்டாசு தொழிற்சாலைகளும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உள்ளது. இது 2 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது.

ஆட்டோமேஷன் மூலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள தீப்பெட்டி தொழிலாளர்களின் தலைவராக சீனிவாசன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் மூன்று முறை கவுன்சிலராகவும், ஒரு முறை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். திங்கள் கிழமை அன்று தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.

பத்து ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் திமுகவின் ஆதரவு தவிர்த்து, சீனிவாசனும் கோவில்பட்டியில் ஒரு இடதுசாரி வலுவாக உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார் . இந்த தொகுதியில் சிபிஐ கட்சி ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இருப்பினும் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் கடம்பூர் ராஜு தான் இங்கு வெற்றி பெற்றுள்ளார்.

கோவில்பட்டியில் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்ட திமுகவின் தூத்துக்குடி எம்.பி கனிமொழி மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோரும் சீனிவாசனுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்த தொகுதியின் தேர்தல், தமிழக தேர்தலின் முக்கிய காரணிகளாக இருக்கும் பணம் சார்ந்ததோ சாதி சார்ந்ததோ இல்லை. கோவில்பட்டி போராட்டங்களுக்கும் இலக்கியத்திற்கும் பெயர் பெற்றது. இங்கு நீங்கள் எந்த சாலையில் சென்றாலும் அங்கே நீங்கள் ஒரு எழுத்தாளரை காண்பீர்கள். அது மதுரகவி பாஸ்கரதாஸாக இருந்தாலும் சரி, பாராதியாராக இருந்தாலும் சரி. அவர்கள் எல்லாம் இங்கே இருந்து தோன்றியவர்கள். வறண்ட மண்ணின் மொழி பேசும் கிரா, சோ தர்மன் ஆகியோரும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் தான்.

18 ஆம் நூற்றாண்டு வரை பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய வீரபாண்டியா கட்டபொம்மன் போன்ற கதைகளிலும் இந்த நிலம் நிறைந்துள்ளது. “எனவே கோவில்பட்டியை குறைத்து மதிப்பிடாதீர்கள். மக்களை இங்குள்ள சாதி உணர்வுகளில் வாங்கவோ சிக்கிக்கொள்ளவோ ​​முடியாது, ”என்கிறார் சீனிவாசன், பெரிய தொழிலாள வர்க்க மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தன்னையும் சசிகலாவையும் கட்சியில் இருந்து வெளியேற்றிய பிறகு புதிய கட்சியுடன் தினகரன் கோவில்பட்டியை தேர்வு செய்ய காரணம் என்ன? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு திமுக மற்றும் அதிமுகவை மிரள செய்தவர்.

தினகரன் மாணிக்கராஜாவை கருத்திக் கொண்டு கோவில்பட்டி பாதுகாப்பான தொகுதியாக இருக்கும் என்று எண்ணி இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார். இப்பகுதியில் அமமுக தலைவராக மாணிக்கராஜா இருக்கிறார். தினகரனின் முக்குலத்தோர் தேவர் பிரிவினரிடையே கணிசமான செல்வாக்கை இவர் பெற்றுள்ளார்.

சசிகலா அரசியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்த நிலையில் அமமுகவை தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் தினகரன். மற்ற பகுதிகளில் தனியாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவில்பட்டியில் இன்னும் பிரச்சாரம் ஆரம்பிக்கவில்லை என்ற போதிலும் அவரின் வாகனங்கள் இங்கே சத்தமாக இருக்கின்றன.

அதிமுக அரசின் சிறந்த பணி எனக்கு வெற்றியை தேடித்தரும் என்று கூறியுள்ளார் கடம்பூர் ராஜூ. எங்களின் ஆட்சி அம்மாவின் மரணத்திற்கு பிறகு நீடிக்காது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தேர்தலை எதிர்கொள்கின்றோம் என்றார்.

ஆனாலும் ராஜூவிற்கு எதிரான அதிருப்தி இங்கே நிலவி வருகிறது. பல்வேறு சர்ச்சைகள் குறிப்பாக, காவல்துறையினருக்கு வழங்கப்படும் அதிகப்படியான அதிகாரம். சாத்தான்குளம் சிறையில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தார் என்றும், தூத்துக்குடி எஸ்.பியை பாதுகாத்தார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு பறக்கும் படையினர் ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: