Namakkal District Local Body Election AIADMK, DMK Candidates List 2019 : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிச.,09 முதல் 16 வரை பெறப்பட்டது.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…
இந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடந்து வரும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரக உள்ளாட்சி தேர்தல் : திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்: 2,06,657
கிராம ஊராட்சி தலைவர்: 54,747
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: 32,939
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்: 3,992
மொத்த வேட்பு மனுக்கள்: 2,98,335
வேட்பாளர், வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் மாநில தேர்தல் ஆணைய இணையதளமான www.tnsec.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திராவிட முன்னேற்ற மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்றது. இதில் தற்போது வரை
திருவண்ணாமலை வடக்கு
திருவண்ணாமலை தெற்கு
திருச்சி வடக்கு
திருச்சி தெற்கு
கரூர்.
சேலம் மத்தி
சேலம் மேற்கு
கோவை தெற்கு
நீலகிரி
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
தூத்துக்குடி வடக்கு
தூத்துக்குடி தெற்கு
கன்னியாகுமரி கிழக்கு
ஆகிய கழக மாவட்டங்களில், கூட்டணிகட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவுடன். தலைமை கழகத்தின் ஒப்புதலோடு அந்தந்த மாவட்ட கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.