Tamil Nadu rural local body elections 2019 Over 18,000 elected unopposed : தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 18 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் 2,31,890 நபர்கள் போட்டியிட உள்ளனர்.
Advertisment
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியல் வெளியீடு!
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் ”2 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களில் 91,975 பதவிகளுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 வேட்புமனுக்கள் பெறப்பட்டது என்றும் அதில் 3,643 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்றும், 48 ஆயிரத்து 891 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது 18ம் 570 பதவிகளுக்கு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2,31,890 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளனர்.
Advertisment
Advertisements
திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி...
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி
76,746 பதவிகளுக்கு 2,09,847 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 1994 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 18,818 நபர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 18,137 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த பதவிகள் போக மீதம் இருக்கும் பதவிகளுக்கு 1,70,898 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்
மொத்தம் 9,624 பதவியிடங்களுக்கு 54,757 நபர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 753 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 17,983 வேட்புமனுக்கள் திரும்பி பெறப்பட்டது. 410 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 35,611 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள்
5,090 பதவிகளுக்கு 34,398 உறுப்பினர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 787 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 10,812 மனுக்கள் திரும்பி பெறப்பட்டது. 23 நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட 5,067 பதவியிடங்களுக்கு 22,776 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
515 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்காக 3 ஆயிரத்து 992 வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 109 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 1278 மனுக்கள் திரும்ப பெறப்பட்டது. தற்ஓது 2,605 நபர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதில் யாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவில்லை.