நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 154 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்து. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் கனிசமான வாக்குகளை பெற்றனர். இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றியை எட்டும் நிலையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே பல தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும்அளவுக்கு வாக்குகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டமன்ற தேர்தலில், அதற்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளது. ஆனாலும் அமமுக மற்றும் தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதுதான் முதல் தேர்தல் என்பதால் மக்கள் நீதி ம்ய்யத்தின் தோல்வியை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தேர்தல் தோல்வியால் கட்சியில், சீரமைக்க வேண்டும் என்று நிர்வாரிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் துணைத்தலைவர்களில் ஒருவரான விஞ்ஞானி பொன்ராஸ் இதனை தெரிவித்தார். தேர்தலில் தோல்வியடைந்த காரணம் குறித்து விவதிக்க அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ்(ஒய்வு), தங்கவேல், உமாதேவி, குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாகவும், இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வது குறித்து கட்சியின் தலைவரே முடிவு செய்வார் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ராஜினாமா கடிதங்கள் குறித்து கமல்ஹாசன் விரைவில் பரிசீலனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரன், தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் முடிவு குறித்து அவர் கூறுகையில், தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்த பின்னும், கமலின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. இனி கமல் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. அவர் மீண்டும் தலைமை பண்பு கொண்டவராக செயல்படவேண்டும். எனக்குள் அரசியல் விதை விதைத்த கமல்ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil