Tamil news Update MK Stalin What Are Challenges Facing AS Cm | Indian Express Tamil

முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்?

MK Stalin Tamilnadu CM : மிக பிரம்மாண்டான அரங்கில் பதவியேற்பு விழா வைப்பதற்கு பதிலாக எளிமையான பதவியேற்பு என்பது எந்த விதத்திலும் தவறில்லை

முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் 159 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2-ந் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து திமுகவின்  அடுத்த செயல் என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக திமுக எம்எல்ஏக்க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களுகம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் சட்டமன்ற குழ தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில்பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றது முதல் பதவியேற்பு விழா மற்றும் முதல்வராக பதவியேற்கும் அவரின் கண்முன் இருக்கும்ம் சவால்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில்,   இப்போது அவர் கையில் கிடைத்திருப்பது அதிகாரம் மட்டுமல்ல ஒரு பெரிய பெறுப்பு என்பதை உணர்ந்து அவர் செயல்பாடுகள் தொடங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கொரோனா எதிர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஆயிரக்கணக்காக ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியில் ஈடுபடுத்தியதை மிக முக்கியமான நகர்வாகவும் பார்க்கமுடிகிறது.

ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் சென்று அவர் ஆதரவு தெரிவித்து பேசும்போது, திராவி முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை எதிர்கொள்வதற்கு படுக்கைகளை அதிகரிக்க முடிகிறது. ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறை செவிலியர்கள் பற்றக்குறை என்ற கேள்வியை முன்வைத்துக்கொண்டிருந்தபோது, இவர் ஒப்பந்த செவிலியர்களை நிரந்த பணியாளர்களாக மாற்றியுள்ளது ஒரு நல்ல நகர்வாக எனக்கு தோன்றுகிறது. அதன்பின் ஊடகவியலாளர்களை முன்னகளப்பணியாளர்களாக அங்கீகரித்தது மிக முக்கியமான நகர்வாக நான் நினைக்கிறேன்.

கொரோனா எதிர்ப்புக்கு மக்களோடு இணைந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பிரச்சாரத்தையும், மருத்துவ உலகத்தோடு இணைந்து செயல்படும் சமூகத்தை  தயார் செய்பதற்கு இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். அமெரிக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய ஊரடங்கு உத்தரவை தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கூறியுள்ளார். ஆனால் நாடு முழவதும் பொதுமுடக்கம் அறிவிக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டில் இந்த ஒருவார காலம் பார்த்துவிட்டு பொதுமுடக்கத்தை அறிவிப்பதற்கான சூழல் நிலவுகிறது. இந்த கொரோனா தொற்றை ஓரளவு தடுத்ததற்கு பிறகு, நிதானமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைளை மக்கள் துணையோடு எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறார் என்று என்று பார்க்கிறேன. தொடக்க காலத நிகழ்வுகள் சரியானதாகவே தெரிகின்றன என்று கூறினார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறுவது குறித்து தொண்டர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், பதவியேற்பு விழா உளிமையாக நடப்பது தொண்டர்களுக்கு நிச்சயம் வருத்தமாகத்தான் இருக்கும். கிட்டதட்ட 10 ஆண்டு காலத்திற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வருகிறது. இவர் எப்போது முதல்வர் ஆவார் என்ற ஏக்கம் அக்கட்சியினருக்கு நீண்டகாலமாக இருந்தது. திராவிட அரசியல் என்றாலே தமிழ்நாட்டில் கொண்டாட்டம் தான். இதுவே நமது ஜனநாயக மான்பு.  ஆனால் அது இந்த முறை முடியாமல் போவது உண்மையாகவே பெரும் வருத்தத்தை கொடுப்பதாகவே நான் நினைக்கிறேன்.

மிக பிரம்மாண்டான அரங்கில் பதவியேற்பு விழா வைப்பதற்கு பதிலாக எளிமையான பதவியேற்பு என்பது எந்த விதத்திலும் தவறில்லை. ஆனால் கொண்டாட்டம் மிஸ் ஆகுதே என்ற வருத்தும் நிறைபேரிடம் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை,ஸ்டாலின் பொறுப்புகள் மற்றும் நிர்வாக திறமைகளுக்கு பெயர் போனவர் . அது அனைவருக்கும் தெரியும். அவருடைய மிக்பெரிய பிளஸ் பாயிட் அவர் அரசியல் தலைவராக இருப்பதை விட ஒரு ஐஏஎஸ் ஆபீசர் மாதிரிதான் நடந்துகொள்வார் என்று தலைமை செயலகத்தில் மற்றவர்கள் பேசி கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல நிர்வாகத்திற்கு பெயர்போனவர் இந்த கோவிட் காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதைதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால இந்த நிலையை அவர் நிச்சயமாக சரியாக கையால்வார் என்று நம்புகிறோம்.

கொரோனாவை வெற்றிகரமான கையாண்ட பிறகு, ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்காக இன்னொரு விழாவை வைத்துக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஆட்சியின் தொடக்கம் மிக எளிமையாக அமைதியான முறையில் இருந்தாலும் கூட இடையில் ஒரு வெற்றிகரமான விழாவை திமுக கொண்டாட முடியும். ஆனால் இப்போது நாம் நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகிவிட்டது. மேலும் பதவியேற்பதற்கு முன்பாகவே கொரோனா தொடாபான கட்டுப்பாடுகளில் ஸ்டாலின் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்றுவதே அவருடைய முதல் தேவையாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

கொரோனா பெருற்தொற்றை சமாளிப்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. சமீப காலமாக கொரோனா தொற்று அச்சுத்தல் போன்று கருத்துச்சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கருத்துச்சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்ற  ஒரு சுதந்திர சூழலை உறுதிப்படுத்த வேண்டிய முதல் பொறுப்பு அவருக்கு உள்ளது. அதேபோல் தமிழக அரசின் பாரம்பரியமான நல்லினக்கம் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றை முதன்மை பொறுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகயாளர் ஓருவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tamil news update mk stalin what are challenges facing as cm