scorecardresearch

தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் அதிகரித்த கொரோனா பாதிப்பு; மாநிலங்களின் நிலவரம் இதோ…

Tamil nadu kerala assam west bengal election, corona cases: மார்ச் 15 முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.

கோவிட் -19 இன் இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநில அரசுகள் சமீபத்திய நாட்களில் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மார்ச் 15 முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கலந்துக்கொண்ட அரசியல் பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்கள் நடைபெற்றன, அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கூடுதலாக, மேற்கு வங்கத்தில் இன்னும் நான்கு கட்ட வாக்கெடுப்புகள் நடத்தப்பட உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில், மாநிலத்தில் அரசியல் பிரச்சாரம் முழு வீச்சில் உள்ளது.

மார்ச் 17 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மாநாட்டை நடத்தினார். அதில், தொற்றுநோயைக் கையாள்வதில் இந்தியா, “கவனக்குறைவுக்கு” வழிவகுக்கக் கூடாது என்றும் மக்கள் ‘சோதனை செய்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சையை தீவிரமாக பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலமே வைரஸின் வளர்ந்து வரும் இந்த “இரண்டாவது அலையை” நிறுத்த முடியும் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.

இருந்த போதிலும், அண்மையில் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் தேர்தல் பேரணிகளிலும், அரசியல் தலைவர்களின் பொதுக் கூட்டங்களிலும் கோவிட் தடுப்பு விதிமுறைகளான, முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவை மீண்டும் மீண்டும் மீறப்பட்டன.

கீழ்காணும் மாநிலங்களில் தேர்தலால் கோவிட் -19 பாதிப்புகள் எவ்வாறு அதிகரித்தன என்பதைப் பாருங்கள்.

மேற்கு வங்கம்

எட்டு கட்ட மேற்கு வங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை நடைபெறும். தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக தீவிர பிரச்சாரத்தை வங்காளத்தில் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டி.எம்.சி பிரச்சாரத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமை தாங்குகிறார், அவர் தான் போட்டியிடும் தொகுதியான நந்திகிராமில் காலில் காயம் ஏற்பட்ட பின்னரும் மெகா பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

மார்ச் 1 ம் தேதி வங்காளம் 200 புதிய கொரோனா பாதிப்புகளை மட்டுமே பதிவு செய்திருந்தது. ஏப்ரல் 13ல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,798 ஆக உயர்ந்து வருகிறது. இந்த காலத்திற்குள், அரசு 10,10,086 கோவிட் சோதனைகளை நடத்தியுள்ளது. இருப்பினும் மாநிலத்தில் 170 பேர் இறந்துள்ளனர்.

கோவிட் தடுப்பு வழிமுறைகளை  பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்தபோதும், மாநிலத்தில் பொதுமக்கள் பேரணிகள் ஒரு வழக்கமாகிவிட்டன. தொற்று நோய்கள் மற்றும் பெலியாகட்டா ஜெனரல் (ஐடி & பிஜி) மருத்துவமனையின் சஞ்சிப் பாண்டியோபாத்யாய், தேர்தல்களின் போது மாநிலத்தில் “கடுமையான வெடிப்பு” இருப்பதாக கணித்துள்ளார்.

மேலும், “இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகளின் பேரணிகள் மற்றும் கூட்டங்களில் ஏராளமான மக்கள் பங்கேற்பதை நாங்கள் காண்கிறோம், அங்கு தொற்றுநோய்களின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, ”என்றும் அவர் கூறினார்.

இந்த நோய் கடுமையான வெடிப்பை நோக்கி நகர்கிறது, தேர்தல்கள் முடிவதற்கு முன்பே இது நிகழக்கூடும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு

மார்ச் 1 ம் தேதி, மாநிலத்தில் 470 புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஏப்ரல் 13ல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,715 ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில், அரசு 31,56,777 கோவிட் சோதனைகளை நடத்தி உள்ளது மற்றும் மாநிலத்தில் 444 பேர் இறந்துள்ளனர்.

கேரளா

மார்ச் 1 ம் தேதி மாநிலத்தில் 3,496 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 13ல், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,615 ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில், மாநிலம் 2,365,420 கோவிட் சோதனைகளை நடத்தியது மற்றும் மாநிலத்தில் 604 பேர் இறந்துள்ளனர்.

அஸ்ஸாம்

மார்ச் 1 ம் தேதி, மாநிலத்தில் 23 புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 13ல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 378 ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில், மாநிலம் 8,18,546 கோவிட் சோதனைகளை நடத்தியது மற்றும்  மாநிலத்தில் 26 பேர் இறந்துள்ளனர்.

புதுச்சேரி

மார்ச் 1 ஆம் தேதி, 19 புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவு செய்திருந்தது. ஏப்ரல் 13ல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 313 ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில், மாநிலம் 80,711 கோவிட் சோதனைகளை நடத்தியது மற்றும் மாநிலத்தில் 27 பேர் இறந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assam kerala west bengal election corona cases