Tamilnadu assembly 2021 tamil news: தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலில் களம் காணும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதோடு தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வாக்குகளர்களை கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சியான திமுக தனது 10 ஆண்டு கனவு திட்டமாக உள்ள 7 உறுதிமொழிகளை அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதில் பொருளாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் சமூக நீதி போன்றவை அடங்கும்.
திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ரூபாய் 35 லட்சம் கோடியைத் தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடுத்த 10 ஆண்டுகளில் எட்டும் எனவும், இதன் மூலம் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதோடு தனிநபர் வரும் ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்துக்கு மேலாக உயரத்த்தப்படும் என்றும் கூறினார். "இந்த 10 ஆண்டு திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து உயர்த்தும்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
விடியலுக்கான முழக்கம்: மக்கள் சந்திப்பு. https://t.co/0jYfOBvwEc
— M.K.Stalin (@mkstalin) March 7, 2021
ரூ.1000 உரிமைத்தொகை
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஸ்டலின் கூறினார். "தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க உள்ளோம். இதன் விளைவாக, பொது விநியோக நிலையங்களில் இருந்து உணவு (அத்தியாவசிய) பொருட்களைப் பெறும் அனைத்து குடும்பங்களும் நிச்சயம் பயனடைவார்கள்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இதே போன்ற திட்டத்தை முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பித்தக்க ஒன்று.
7 உறுதி மொழிகள்
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்!
பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும்.
7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்! pic.twitter.com/RlmAghSfCE
— M.K.Stalin (@mkstalin) March 7, 2021
கிராமப்புறதில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் குழாய் அமைக்கப்படும் என்று கூறியுள்ள ஸ்டாலின், திமுகவின் கிராம அபிவிருத்தி திட்டத்தில் கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதோடு 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட அரசு உதவும் என்றும், இது குடிசையில் வசிக்கும் மக்களை 16.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டடோருக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள ஸ்டாலின், தொழில்நுட்ப உதவியுடன் மனிதக் கழிவுகள் அகற்றப்படும் என்றும், மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் விடியலுக்கான உறுதிமொழிகள்-நேரலை. https://t.co/MWWNTeE1UQ
— M.K.Stalin (@mkstalin) March 7, 2021
வேளாண்மை துறையைப் பற்றி ஸ்டாலின் குறிப்பிடுகையில், "தமிழகத்தில் தற்போது 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இது இரு மடங்காக 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.