Tamil Nadu By Election 2019: இறுதி நிலவரப்படி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 70.90 சதவீத வாக்குகளும், 18 சட்டப் பேரவை தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் இறுதி நிலவரம் தெரிய வந்தது. இடைத் தேர்தல் தொகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகவில்லை.
உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழா இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் என்றால் மிகையாகாது. 17வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2ம் கட்டமாக தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இன்று(ஏப்.18) தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாக இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற்கண்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு துவங்கிய மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்தது.
‘வைகைப் புயல்’ வடிவேல் சாலிகிராமம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. எனவே யாரிடமும் ஆலோசனை கேட்டு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இளைஞர்கள் இல்லை. இனியாவது நல்லது நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.
1. பூந்தமல்லி- 48.1
2. பெரம்பூர்- 34.6
3. திருப்போரூர்- 48.1
4. சோளிங்கர்- 46.1
5. குடியாத்தம்- 48.3
6. ஆம்பூர் – 50.2
7. ஓசூர்- 41.9
8. பாப்பிரெட்டிபட்டி- 40.6
9. அரூர்- 50.6
10. நிலக்கோட்டை- 44.94
11. தஞ்சாவூர் – 41.7
12. மானாமதுரை – 43.8
13. ஆண்டிப்பட்டி – 41.2
14. பெரியகுளம் – 32.3
15. சாத்தூர் – 42.50
16. பரமக்குடி – 38.4
17. விளாத்திகுளம் – 35.2
18. திருவாரூர் – 46.13
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இதுவரை 49.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தங்களது ஜனநாயக கடமையாற்ற வாக்குச்சாவடிகளில் குவிந்த மக்கள்
வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சோளிங்கரில் 3 மணி நேர வாக்குப்பதிவு தாமதம்
How to Vote Using EVM, VVPAT: இன்று முதன்முறையாக ஓட்டு போட இருப்பவர்களுக்கு இதோ முக்கியமான தகவல்!
Check Your Name in Voter List Online: உங்கள் பெயர் ஓட்டு லிஸ்டில் இருக்கா? எனத் தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
தங்க தமிழ்ச்செல்வன் – ஆண்டிபட்டி தொகுதி
ஆர்.முருகன் – அரூர்
மாரியப்பன் கென்னடி – மானாமதுரை
கதிர்காமு – பெரியகுளம்
ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்
பழனியப்பன் – பாப்பிரெட்டி பட்டி
செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி
எஸ். முத்தையா – பரமக்குடி
வெற்றிவேல் – பெரம்பூர்
என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்
கோதண்டபாணி – திருப்போரூர்
ஏழுமலை – பூந்தமல்லி
ரெங்கசாமி – தஞ்சாவூர்
தங்கதுரை – நிலக்கோட்டை
ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்
எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர்
ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம்
கே.உமா மகேஸ்வரி – விளாத்திகுளம்
1.பூந்தமல்லி 2.பெரம்பூர் 3.திருப்போரூர் 4.சோளிங்கர் 5.குடியாத்தம் 6.ஆம்பூர் 7.ஓசூர் 8.பாப்பிரெட்டிபட்டி 9.அரூர் (தனித்தொகுதி) 10.நிலக்கோட்டை (தனித்தொகுதி) 11.திருவாரூர் 12.தஞ்சாவூர் 13.மானாமதுரை 14.ஆண்டிப்பட்டி 15.பெரியகுளம் 16.சாத்தூர் 17.பரமக்குடி 18.விளாத்திகுளம் ஆகிய 18 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் போடியில் மலை கிராம மக்கள் 400 பேர் தேர்தலை புறக்கணித்து போராட்டம்.
மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வாக்களித்தார். ”தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். பல குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்படும் அளவுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக முறைப்படி இத்தேர்தல் நடந்து முடிய வேண்டும் என்பது தான் நம் அனைவரின் எண்ணமும்” என அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உடல்நலம் குன்றிய நிலையிலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு, விருகம்பாக்கம், திருப்பூர், ஒட்டஞ்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இயந்திரம் கோளாறாகியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு, இன்னும் பல இடங்களில் துவங்கவே இல்லை.
சென்னையில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், மதுரை சிந்தாமணி டாக்டர் முத்துச்சாமி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிமுக என எழுதப்பட்டிருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் வாக்குச்சாவடியில் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா வாக்களித்தார்.
‘நியாயமாக அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என டிஜிபி அசுதோஷ் கேட்டுக் கொண்டார்.
சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று முதல்வர் பழனிசாமி வாக்களித்தார். முதல்வருக்கென்று தனிச் சலுகை ஏதும் இல்லாமல், மக்களோடு வரிசையில் நின்று அவர் வாக்களித்தது, தமிழகம் இதுவரை காணாத ஒன்று!.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட்டின் முத்தரசன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில், பூத் ஏஜெண்டுகள் யார் என்ற குழப்பத்தால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல், கோவை, ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், கரிசல்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் பழுதாகி இருப்பதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சேலம் எடப்படியில் உள்ள செட்டிமாங்குறிச்சி அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகியுள்ளது. இதனால், வாக்குப்பதிவு அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இன்று தொடங்கியது.
முதலில், வாக்காளர் தான் கொண்டு வந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதைவைத்து வாக்காளர் பட்டியலில் பெயரை ஆய்வு செய்யும் தேர்தல் அலுவலர், பெயரை கண்டுபிடித்ததும் அதை ‘டிக்’ செய்வதுடன், அங்கு அரசியல் கட்சி வாரியாக இருக்கும் பூத் ஏஜெண்டுகளிடம் வாக்காளரின் பெயரை சத்தமாக சொல்வார். அவர்களும் தங்கள் கைகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் குறித்து வைத்துக் கொள்வார்கள்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளரின் இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத கருப்பு மை வைக்கப்படும். அதன்பின்னர், அவர் வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்.
தமிழகம் முழுவதும் பதற்றமானவை என்று அறியப்பட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில், ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் சித்திரம் தேரோட்டம் தொடங்கியது. தேர்தல் ஒருபக்கம் துவங்க, தேரும் ஒருபக்கம் துவங்கியது.
களைக்கட்டுகிறது ‘தூங்கா நகரம்’!
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் 100% சதவிகித வாக்குகள் இலக்காக கொண்டு செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதிரி வாக்குப்பதிவு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், இயந்திரங்கள் அனைத்தும் இறுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.