Advertisment

இப்பவே வாக்காளர்களுக்கு கிஃப்ட்: அதிமுக மீது திமுக புகார்

TN Assembly Election : திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி லஞ்சம் கொடுக்கப்படுவதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
இப்பவே வாக்காளர்களுக்கு கிஃப்ட்: அதிமுக மீது திமுக புகார்

Assemly Election 2021 Aiadmk Give Gift For Voters : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 4 நாட்களை கடந்துள்ள நிலையில், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் வாக்காளர்களுக்கு ஆளும் கட்சி லஞ்சம் கொடுக்கப்படுவதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.ராஜமானிணியிடம் சிங்கநல்லூர் எம்.எல்.ஏ என் கார்த்திக் அளித்த புகாரில், கோயம்புத்தூர் நகரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவுள்ள பரிசுப்பொருட்களை அதிமுக நிர்வாகிகள் சேமித்து வைத்துள்ளனர். நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு பீலமேடுவில் பரிசுகளை விநியோகிப்பதற்கான முயற்சியை நடைபெற்றது. அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். ஆனாலும் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக விநியோகிகப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், பீலமேடு பகுதியில் உள்ள ஒரு அதிமுக நிர்வாகியின் வீட்டில், மறைந்த முதல்வர் ஜே.ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோரின் படங்கள் பதிக்கப்பட்ட வேட்டிகள் மற்றும் புடவைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) இரவு அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான காரில், மக்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக திமுக வார்டு செயலாளர் மாடசாமி தெரிவித்துள்ளார். இந்த பரிசுப்பொருட்களில், இ.பி.எஸ் மற்றும் ஜெயலலிதா பதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பரிசுப்பொருட்கள் விநியோகிக்க சென்ற காரைக் தடுத்து நிறுத்திய திமுகவினர், அந்த கார் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தாகவும், ஆனால் இது தொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காரை செல்ல அனுமதித்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் தற்போது  தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக திமுக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த புகாருக்கு பின், அதிமுகவினர், பரிசுப்பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தொடர்ந்து திருப்பூரில் உள்ள தாராபுரத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு ஒரு தனியார் கல்லூரியில், 1,700 புடவைகள் மற்றும் 4,500 வேட்டிகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த புடவை மற்றும் வேட்டிகள் மூடப்பட்டிருந்த அட்டைகளில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ், மற்றும் எஸ் பி வேலுமணி  ஆகியோரின் ஆகியோரின் படங்கள் பதிவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதே கல்லூரி வளாகத்தில், தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், ஒரு மினி வேனில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த 1,950 எஃகு தகடுகளை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tn Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment