Tamilnadu assembly election 2021 Tamil News: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று சக்தியாக உருவெடுத்திருந்தார். எனவே அவருக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் அவர் போட்ட்டியிட்ட விருத்தாச்சலம் தொகுதியில் 40.49% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்தது 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, ரிஷிவாண்டியம் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த், 53.19% வாக்குகளை பெற்று மீண்டும் சட்டமன்றதிற்கு தேர்வானார்.
2011 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படவே, 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இணைத்து, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் 15.14% வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். தற்போது இந்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமமுக கட்சியோடு கூட்டணியில் உள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
உடல்நலக்குறைவால் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூடங்களை தவிர்த்த விஜயகாந்த், இன்று முதல் தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபடவுள்ளார். மேலும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தொடங்கும் அவரது பிரச்சாரம் திருத்தணி, விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.