Tamilnadu assembly election 2021: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் நிறுவனர் ராக்கெட் ராஜா ஹெலிகாப்டரில் சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர்கள் அளித்த பேட்டியில், "ஆலங்குளம் தொகுதியில் மக்கள் இவ்வளவு வரவேற்பு தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆட்டச்சியாளர்கள் இந்த தொகுதியில் சிறப்பான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த தொகுதியில் எங்கள் கட்சியிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தொகுதியை மீட்டெடுக்கும் கடமையை தொகுதி மக்களிடம் நாங்கள் பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த தேர்தலில் 'தலைக்கவசம்' சின்னத்தில் போட்டியிடும் ஹரி நாடார், தற்போது ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து தரையிரங்கினார். இப்படி மாஸாக ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஹரி நாடரை பார்த்து அப்பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் வியந்து பார்க்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )