டோக்கன் கொடுத்து பணம் விநியோகம்; நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் தர்ணா

Vanathi Srinivasan’s aide distributes money to voters Tamil News: கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் குற்றம் சாட்டிய நாம் தமிழர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் குதித்தனர்.

Tamilnadu assembly election 2021: kovai south constituency vanathi Srinivasan’s aide distributes money to voters

Tamilnadu assembly election 2021: தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் குற்றம் சாட்டிய நாம் தமிழர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் குதித்தனர். 

கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப்பும், திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இதில் நாம் தமிழர் கட்சியின் அப்துல் வகாப்பும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. 

இந்த நிலையில், வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்கள் வாக்குச் செலுத்த செல்லும் முன் பணம் வழங்குவதற்காக  டோக்கன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி டோக்கன் வழங்கிய சிலரை பிடித்த காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாததால், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகிய இருவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தால் போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோக செய்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election 2021 kovai south constituency vanathi srinivasans aide distributes money to voters

Next Story
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிப்பு; தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட்west bengal, poll officials suspend, poll offical found with evm machines at tmc leaders, மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ஈவிஎம் இயந்திரங்களுடன் பிடிபட்ட தேர்தல் அலுவலர், west bengal assembly elections 2021 , தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட், மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com