முந்தப் போவது சீமானா, கமல்ஹாசனா? பரபரக்கும் அரசியல் வட்டாரம்

தமிழக அரசியல் வரலாற்றில் இந்த தேர்தலில் முதல்முறையாக, 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 70 சதவீதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். தொடாந்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த தேர்தலில் முதல்முறையாக, ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் என 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் விழிப்புடன் காத்திருக்கின்றனர். இதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராடவிட கட்சிகளுக்கு இடையே வெளிப்படையான போட்டி நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சி எது என்பது குறித்து சீமானின் நாம் தமிழர் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டி வெளிப்படையான இல்லாவிட்டாலும், மறைமுகமாக அந்தந்த கட்சியினர் காய் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மதுரையில் இயக்கமாக தோன்றிய நாம் தமிழர் இயக்கம் நாளடைவில் நாம்தமிழர் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில்  தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் வெற்றிபெறவில்லை என்றாலும், அனைத்து தொகுதிகளிலும் கனிசமான வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு சதவீதம் 1.06 சதவீதமாகும்.

இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 3.91 சதவீத வாக்குகள் பெற்ற  நிலையில், தற்போது 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்யிடுவதாக அறிவித்து, முதல் ஆளாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. தமிழகத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளடங்கிய கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சி, நகரத்தை விட கிராமபுரங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் எப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருக்கும் நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வநதால், விவசாயம் அரசு வேலையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மேலும அக்கட்சிக்கு ஒதுக்கியுள்ள கரும்பு விவசாயி சின்னமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்களான ஜெயல்லிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாத நிலையில், அரசியலுக்கு அடியெடுத்து வைத்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகளில் ஒருவரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில அனைத்து மக்களவை தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் பெற்றனர். இதில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்கு சதவீதம் 4% ஆகும். மேலும் ஒரு சில தொகுதிகளில் மற்ற கட்சிகளில் வெற்றியை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளே தீர்மானித்ததாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் ஒரே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெரும் பிரபலமானது.

இந்த தேர்தல் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில், தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் தனத்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். மேலும் தமிழகத்தை சீரமைப்போம், திராவிட கட்சிகளுக்கு மாற்று மக்கள் நீதி மய்யம் என்று கூறிய கமல்ஹாசனின் தேர்தல் விளம்பரம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

மேலும மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் அறிவிப்பில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஊக்கதொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் இவர் அறிவித்த சில நாடகளிலேயே திமுகவுமட, அடுத்த சில நாட்களில் அதிமுகவும் இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதற்காக கமல்ஹாசன் அக்கடசிகளை குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் திமுகவை கடுமையாக  விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் 2 வாரஙகளே (மே 2) உள்ள நிலையில், எந்த்தெந்த கட்சி எந்தெந்த இடத்தை பிடிக்க்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் நாம் மேலே கூறியபடி திமுக அதிமுக இடையே வெளிப்படையான போட்டி நிலவி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சியினருக்கு அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவிவருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள்  இந்த தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணியில் களமிறங்கியுள்ளதால் மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி இடையே திராவிட கட்சிகளுக்கு அடுத்த இடத்தை பிடிக்க போட்டி மறைமுக போட்டி நிலவி வருகிறது. இதில் சீமான் மற்றும் கமல்ஹாசன் இருவருமே தொடக்கத்தில் சினிமாவை பின்னணியாக கொண்டவர்கள். இவர்களுக்கு மத்தியில், கடந்த மக்களவை தேர்தர்லில், 5.46 சதவீதம் வாக்கு வாங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த மோதலில் இணைந்துள்ளது. இவர்களில் யார் யாரை வீழ்த்துவார் என்பது மே 2-ந் தேதி தெரிய வரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election 2021 mnm kamalhaasan vs ntk seeman

Next Story
முதல்வர்னா எடப்பாடி; எதிர்க்கட்சித் தலைவர் என்றால்? சூடாகும் அதிமுக விவாதம்Who is Opposition legislative leader in aiadmk, அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஓபிஎஸ், இபிஎஸ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், edappadi palaniswami, O panneerselvam, EPS, OPS, tamil nadu assembly elections 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express