Advertisment

ஆபாச வீடியோ பிரச்னை: செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பெண் வேட்பாளர் வீரலட்சுமி

My India Party’s candidate Veeralakshmi climbs on cell phone tower and threatens to commit suicide Tamil News: சென்னை பல்லாவரத்தில் 'எனது இந்தியா கட்சி' சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.வீரலட்சுமி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றவாளிகள் மீது காவலர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கததால் செல்போன் கோபுரத்தில் ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu assembly election 2021: My India Party’s candidate Veeralakshmi climbs on cell phone tower, threatens to commit suicide

Tamilnadu assembly election 2021: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்தது. இந்த வாக்குப்பதிவில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக தங்களின் ஜனநாயகக் கடமை ஆற்றினார்கள். தமிழகத்தின் மொத்த வாக்குப்பத்திவு 71.79% ஆக பதிவாகிய நிலையில், அதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.40% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Advertisment

நேற்றைய வாக்குபதிவின் போது, சென்னை பல்லாவரம் தொகுதியில் 'எனது இந்தியா கட்சி' சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே. வீரலட்சுமி, தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய சில குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த மார்ச் மாதத்தில் காவலர்களிடம் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகார் குறித்து நேற்று வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்னர் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது ஆதரவாளர்களுடன் பல்லவரத்திற்கு வந்த வீரலட்சுமி, தனது புகாரின் பேரில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தினார்.

அந்த வழியே சென்றவர்களின் எச்சரிக்கைகளின் அடிப்படையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைந்து வீரலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றனர். சம்பவ இடத்தை அடைந்த அந்த பகுதி போலீசார், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருவதாக அவரிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் கோபுரத்திலிருந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கீழே இறங்கினார்.

முன்னதாக, தனது பிரச்சாரத்தின்போது, ​​வீரலட்சுமி தனது புகாரின் பேரில் போலீசார் செயல்படத் தவறினால், அவரே குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களின் தனிப்பட்ட உறுப்பை துண்டிப்பேன் என்று கூறியிருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Tamilnadu Election 2021 Tamilnadu Assembly Election Pallavaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment