Tamilnadu assembly election 2021: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றன. இதில் தமிழகத்திற்கான வாக்குபதிவு ஒரே கட்டமான ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது.
வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணி போட்டியிட்ட 234 தொகுதிகளில் 159 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான அஇஅதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுள்ள மொத்த வாக்குகளின் சதவிகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணைய பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறது.
அதன் படி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் சதவிகிதம் பின்வருமாறு:
திமுக - 37.70%
அதிமுக - 33.29%
காங்கிரஸ் - 4.27%
பாட்டாளி மக்கள் கட்சி - 3.80%
இந்திய கம்யூனிஸ்ட் - 1.18%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.67%
தேமுதிக - 0.43%
பாஜக - 2.62%
பாமக - 3.80%
மற்றவை - 14.46%
கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகித அப்டேட்களை, இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த இணைய பக்கத்தில் பெறலாம். (https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S22.htm?st=S22)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)