scorecardresearch

பாஜக நெருக்கடியை திறமையாக எதிர்கொள்வோம்: உதயநிதி ஸ்டாலின்

DMK Youth wing leader Udhayanidhi Stalin interview tamil news: “பாஜகவின் நெருக்கடியையும், அச்சுறுத்தல்களையும் துணிவோடு எதிர்கொள்வோம்” என்று உதயநிதி ஸ்டாலின் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tamilnadu assembly election 2021 tamil news DMK Youth wing leader and Chennai Chepauk-Triplicane constituency candidate Udhayanidhi Stalin interview in tamil

Tamilnadu assembly election 2021 tamil news: தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேத்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மற்றும் மாநில கட்சிகள், மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே போல் தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் (திமுக) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்டபாளர்களின் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டார். அதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பரப்பான தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். அவர் போட்டிடும் சேப்பாக்கம் தொகுதியில் கண்டிப்பாக வெல்வார் எனவும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வரும் உதயநிதி ஸ்டாலினிடம் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய நேர்காணலின் தொகுப்பை இங்கு காணலாம்.

உங்களை சந்திக்கும் நபர்கள் பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் கோபமாக இருப்பதாக நீங்கள் கூறி வருகிறீர்கள்? அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மக்கள் பாஜகவுக்கு எதிராக கடுமையான கோபத்திலும், வெறுப்பிலும் உள்ளனர். இல்லையெனில், கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் வென்ற அவர்கள் ஏன் தமிழகத்தில் மட்டும் தோற்கடிக்கப்பட்டார்கள்?

புதுச்சேரியில் அதிமுக மற்றும் ஆளும் கட்சியின் கூட்டணிகளை உடைக்க பாஜக முயன்று வருகிறதே?

பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின்னர், அவர்களோடு கூட்டணி அமைத்து, எங்கள் தலைவரால் முதல்வராகி இருக்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை ஏனென்றால் நாங்கள் பாஜகவுக்கு எதிரான வலுவான கொள்கைகளை கொண்டுள்ளோம்.

பாஜகவால் எதையும் செய்ய முடியும் என்பது உண்மைதான், ஆனால் நாங்கள் அதைக் திறம்பட கையாள்வோம். மற்றும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை துணிவோடு எதிர்கொள்வோம். திமுக எம்.எல்.ஏ.க்களை யாரும் வாங்க முடியாது, அதுதான் எங்களது வலுவான நம்பிக்கை. வெளியேறிய இரண்டு அல்லது மூன்று பேர் மற்ற கட்சிகளிலிருந்து வந்தவர்கள் அல்லது பதவிக்காக எங்களை விட்டுச் சென்றவர்கள். நாங்கள் எங்கள் தலைவர்களை நம்புகிறோம்.

நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்கள் என்று எப்போதாவது நினைத்தது உண்டா?

இல்லை, நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை… ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி 1% என்ற வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைக் கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். கலைஞர் (மறைந்த எம் கருணாநிதி) அந்த வயதிலும் கட்சிக்காக போராடுவதை நான் பார்த்தேன். ஆனால் அந்த நேரத்தில் எனது அரசியல் பணி திருச்சியில் அன்பில் மகேஷுக்கு பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

அதன் பின்னர் 2018ம் ஆண்டு முதல் முழுநேர கட்சிப் பணியில், தீவிரமாக ஈடுபடத் தொடங்கினேன். மாவட்டங்கள், மற்றும் கிராமங்கள் தோறும் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டேன். அந்த ஈடுபாடுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தன. மக்களவைத் தேர்தளுக்கான பிரச்சாரத்தின் போது பெரும்பலோனர் திரண்டனர். இதனால் பிரச்சாரம் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே எனது வாகனம் பழுதடைந்தது. ஆகவே அதை மாற்ற வேண்டியிருந்தது. இதை மிகப்பெரிய வரவேற்பாக நான் பார்க்கிறேன்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், திமுக உறுப்பினர்கள் அரசியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடக்கூடும் என்ற அச்சத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

வன்முறை இல்லாத, பாதுகாப்பான ஆட்சியை திமுக அரசு உறுதி செய்யும் என்று எங்கள் தலைவர் உறுதியளித்துள்ளார்.எனவே அது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. எஙகள் தலைவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைசி ஆட்சியைப் போல, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் திமுகவில் உள்ளவர்கள், தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்திருக்க முயல்வார்கள் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

அதிமுக இப்போது ஆட்சி செய்து வருகிறது, நான் இன்னும் திரைப்படங்களைத் தயாரித்தும், நடித்தும் வருகிறேன். நான் (நீங்கள் சொல்வதைச் செய்திருந்தால்), எனக்கு வேலை கிடைக்காது. இந்த ஏகபோக குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகளே, அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சத்யம் சினிமாஸிடமிருந்து தியேட்டரை அச்சுறுத்தியது மற்றும் வாங்கியது யார் என்று சொல்லுங்கள்? ஜாஸ் சினிமாஸை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர் யார்?. சசிகலா குடும்பத்தினர் தான் இதுபோன்ற செயல்களைச் செய்தார்கள். மக்களுக்கு உண்மை தெரியும். நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிப்போம்.

சி என் அன்னாதுரை மற்றும் கருணாநிதி திரைப்படங்களை அரசியல் பணிகளின் ஒரு பகுதியாகக் கருதினர். மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக … நீங்கள் சினிமாவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ் சினிமா நிறைய மாறிவிட்டது. மக்கள் இப்போது ஓடிடி (OTT) இயங்குதளங்களில் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். நானும் சில நல்ல திரைப்படங்களை பார்க்க முயற்சித்தேன். எனக்குப் பிடிக்காத எனது திரைப்படங்களில் ஒன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. திரைப்படங்கள் வெற்றியடைய சூத்திரம் எதுவும் இல்லை, அதே போல் ஒரு படத்தின் வெற்றியை நாம் கணிக்க முடியாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu assembly election 2021 tamil news dmk youth wing leader and chennai chepauk triplicane constituency candidate udhayanidhi stalin interview in tamil