Aiadmk Announced 6 Candidate : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக தரப்பில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஒரு அணியும், அதிமுக தரப்பில் பாஜக கூட்டணியுடன் மற்றொரு அணியும் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியுடன் 3-வது அணியும் களமிறங்கியுள்ளது.
கடந்த வாரம் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் திமுக காங்கிரஸ், அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில்,
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமியும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சென்னை ராயபுரம் தொகுதியில், அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில், அமைச்சர் சி.வி.சண்முகம் நிலக்கோட்டை தனி தொகுதியில், தேன்மொழி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"