தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னணிலை வகித்தானர். இதே நிலை தொடர்ந்து வந்த நிலையில், மாலை வேலையில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றதாக பரவலாக அறியப்பட்டது.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த அதிமுக ஆட்சி தனது அரியனையை இழந்துள்ளது. அதில் அக்கட்சியில் முக்கிய அமைச்சர் பதவி வகித்து வந்த ஒரு சிலர் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் :
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசப்பேரவை தேர்தலில் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த சட்டசப்பேரவை தேர்தலில் வெளியாக கருத்தக்கணிப்ர் நிலவரங்கள் திமுகவுக்கு சாதகமாக வந்த்து குறித்து கருத்து தெரிவித்த அவர், இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு, அவை அனைத்தையும் பொய்யாக்கி அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முன்னிலையில் இருந்த ஜெயக்குமார் நேரம் செல்ல செல்ல பின்னடைவை சந்தித்தார். இதே நிலை தொடர்ந்து வந்த நிலையில், இறுதியாக 19082 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதில் ஐட்ரீம் மூர்த்தி 49143 வாக்குகள் பெற்ற நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் 30061 வாக்குகளே பெற்றுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி :
கடந்த 2016-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சியில் பால்வத்துறை அமைச்சராக இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போதைய தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது தோல்வியை தழுவியுள்ளார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ராஜேந்திர பாலாஜி இறுதியாக 3458 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் 72195 வாக்குகள் பெற்ற நிலையில், ராஜேந்திர பாலாஜி, 68737 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்:
அதிமுகவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது மீண்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்க்தில் இருந்தே பின்னடைவை சந்தித்த அவர், 53274 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவடி நாசர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 415 வாக்குகள் பெற்றுள்ளார். பாண்டியராஜன் 94 ஆயிரத்து 141 வாக்குகள் பெற்றுள்ளார்.
தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக வெல்லமண்டி நடராஜன் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுடமும், மதுரைவாயில் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின், திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியிடம் 31231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை வந்தித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.