தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை ஐபிஎஸ், நடிகை காயத்ரி ரகுராம் நடனம்: அரவக்குறிச்சி ருசிகரம்

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை ஐபிஎஸ் நடிகை காயத்ரி ரகுராமுடன் நடமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ் நடிகை காயத்ரி ரகுராமுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈட்டுள்ள நிலையில், முன்னணி கட்சிகள் முதல் சிறு கட்சிகள் வரை அனைவரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தகளம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், தொகுதிக்கு வாக்கு செகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தொகுதி மக்களிடையே பல வகையான சாகசங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். உதாரணமாக கடந்த வாரம் விருகம்பாக்கம் தொகுதியில், வாக்கு செகரித்த திமுக வேட்பாளர் ஒருவர் ஹோட்டலில் தோசை சுட்டதும், கோவை மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர்  சினிமா பாடலுக்கு மக்களுடன் நடனமாடியதும், ஆத்தூர் பாமக வேட்பாளர் வரவேற்பு குழுவினருடன் தப்பாட்டம் அடித்ததும், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்கொம்பு, சிலம்பாட்டம் என வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை ஐபிஎஸ், நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் மக்கள் மத்தியில் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைந்து தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் கரூர் அவரக்குறிச்சி தொகுதியில் முன்னாள் ஐபிஎல் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை நமிதா, மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தின் போது நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை ஐபிஎஸ்-டன் நடனமாடியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election annamalai ips dance with gayathri raghram

Next Story
புதுவை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com