Tamilnadu Assembly Election 2021 : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் ஒரு அணியிலும், அதிமுக, பாஜக பாமக, ஆகிய கட்சிகள் மற்றொரு அணியிலும், உள்ளன. மேலும் கமல்ஹாசன் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி. இந்திய ஜனநாயக கட்சி, ஆகிய கட்சிகள் 3-வது அணியாக முடிவெடுத்துள்ளது.
Advertisment
தொடர்ந்து கடந்த ஒருவாரமாக அனைத்து கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறைந்த தொகுதிகள் அளித்ததன் காரணமாக தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகள், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
பாமக 23 தொகுதிகள் :
கடந்த 2016 தேர்தலுக்கு பின் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 30-க்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் பாமக, தற்போது வன்னியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் 20% வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு 10.5% இடஒதுக்கீடு வழங்கி மசோதா தாக்கல் செய்ததை தொடர்ந்து தொகுதிகளை குறைத்துக்கொண்டதாக பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாமகவுக்கு வழங்கப்பட்ட 23 தொகுதிகள் எவை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி, செஞ்சி, மைலாடுதுறை, விருத்தாசலம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், மேட்டூர், நெய்வேலி, சேலம் மேற்கு, வந்தவாசி (தனி) பூந்தமல்லி (தனி) ஆகிய முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக 20 தொகுதிகள் :
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாஜக, தற்போது சட்டசபை தேர்தலிலும், அதே கூட்டணியில் தொடர்கிறது. இதில் கடந்த வாரம் அதிமுக பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 60 தொகுதிகளுக்கு பட்டியல் கொடுத்த பாஜக 40 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் பாஜகவின் கோரிக்கைக்கு அதிமுக செவிசாய்க்காத்தால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி ஏற்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலவ் சுமோக முடிவு எட்டப்பட்டு பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக திருவண்ணாமலை, கோயம்புத்தூர், அரவக்குறித்தி, திட்டக்குடி (தனி) திருவையாறு, தாராபுரம் (தனி) உதகமண்டலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"