Advertisment

பிரதமர் மோடி முதல் ரஜினிகாந்த் வரை : வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

Wish To Stalin : தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
பிரதமர் மோடி முதல் ரஜினிகாந்த் வரை  : வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 70% சதவீத்த்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகின. ஆனால் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வந்ததால், மே 2-ந் தேதி (இன்று) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதற்கு முன்பாக தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெளியான கருத்துக்கணிப்பு நிலவரங்கள் திமுகவுக்கு சாதகமாகவே வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கருத்துக்கணிப்பில் கூறியது போல பல இடங்களில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். இதனால் பிற்பகலில் திமுக ஆட்சி அமைப்பது ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

அதேபோல தற்போது 150 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில் கனிசமான தொகுதிகளில் வெற்றிகளையும் பெற்றுள்ளனர். இதில் ஆட்சி அமைக்க தேவையாக பெரும்பான்மை தொகுதியான 118 தொகுதிகளில்திமுக தனி பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஆட்சி அமைப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்பட வாய்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

.இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற திமுகவுக்கும், முதல்வர் பதவி ஏற்கவுள்ள முக ஸ்டாலினுக்கும் தேசிய தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்களை வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தேசிய மேம்பாட்டிற்காக ஒன்றினைந்து செயல்படுவோம். கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அரசுக்குரிய கடமைகளை நிறைவேற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜநாத் சிங், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில், வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நாங்கள் உங்கள் தலைமையின் கீழ், அந்த திசையில் நம்பிக்கையான படியாக இருப்பதை நிரூபிப்போம் என்று கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் மக்கள் சேவை செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவல் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். பதவிக்காலத்தை, தமிழக மக்களின் நலனுக்காக பயன்படுத்துவார் என்றும், அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment