Tamilnadu Assembly Election CM Palanisamy Campaign : பிரச்சாரத்தின் போது தனது தாய் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவுக்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று முதல்வர் பழனிச்சாமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரமங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா நேற்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் முதல்வரின் பிறப்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில்,இது குறித்து விளக்கம் அளித்த ஆ.ராசா தான் அவதூறாக பேசவில்லை என்றும் ஸ்டாலின் நேர் வழியில் அரசியலுக்கு வந்தர் என்றும் முதல்வர் பழனிச்சாமி குறுக்கு வழியில் முதல்வர் ஆனவர் என்றும் தான் கூறினேன் நான் பேசிய வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது தொடர்பாக அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஆ.ராசா மீது 3 பிரிவுளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை திருவெற்றியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி எனது தாய் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவுக்கு இறைவன் தக்க தண்டனை வாழங்குவார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், கண்கலங்கியடி திமுக திட்ட என்மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறது. திமுகவினர் தாயமார்களை மதிக்கவில்லை. நான் முதல்வராக இருந்துகொண்டு இதை பேசக்கூடாது. ஆனால் இங்கு தாய்மார்களை பார்த்ததால் பேசவேண்டிய நிலை உண்டானது.
நான் என் தாய்க்காக மட்டும் இந்த பிரச்சினையை பார்க்கவில்லை. நீங்கள் அனைவரும் ஒரு குடும்பத்தின் தாய்மார்களாக இருந்து பாருங்கள் எவ்வளவு கீழ்த்தனமாக பேசியிருக்கிறார். சாதாரன மனிதன் முதல்வர் ஆனால் இந்த பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. முதல்வரான எனக்கே இந்த நிலை என்றால் மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? என்தாய் இறந்துவிட்டார் அவரை எப்படிஎல்லாம் தரக்குறைவாக பேசுகிறார் பாருங்கள்.
ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவார். என் தாயை பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil