TN Assembly Election 2021 Priyanka Gandhi Cancelled Campaign : கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தன்னை தனிமைபடுத்திக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் 2-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகம் கேரளா மற்றும் புதுச்சேரியில், வரும் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான உள்ளூர் கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 3-நாள் பயணமாக அசாம் மற்றும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது அவரது கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தி தன்தை தானே தனிமைபடுத்திக்கொண்டார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவிற்கு இன்று காலை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ராபர்ட் வாத்ரா கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளின்படி பிரியங்காவும் நானும் தனிமைப்படுத்தப்படுகிறோம், ”என்று தனதுபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் "அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் இந்த நாட்களில் எங்களுடன் இல்லை, வீட்டில் உள்ள அனைவருமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் அனைவரும் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு வருவோம் என்று நம்புகிறோம்! ” என கூறியுள்ளார். தொடர்ந்து இது தொடாபாக வீடியோ வெளியிட்டுள்ள, பிரியங்கா காந்தி “நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால நான் சில நாட்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தமிழகம், அசாம், மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் திட்டமிட்ப்பட்டிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil