எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது பாஜக : தூத்துக்குடியில் ராகுல்காந்தி

TN Assembly Election 2021 : தூத்துக்குடியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பாஜக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதாக குற்றம் சாட்டினார்.

Rahul Gandhi Election Campaign Thuthukudi : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் என அனைவரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரச்சாரங்களும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின, அதிமுக சார்பில் முதல்வர் பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தேசிய கட்சி சார்பில் முதல் முறையாக  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தை தொடங்கினார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல்காந்தி அதற்கு அடுத்த வாரம் தமிழகத்தின் கோவை திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் புதுச்சேரியில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தற்போது மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை தமிழகத்தில் தூத்துக்குடிக்கு வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி பேசும்போது இந்தியாவில், கடந்த 6  ஆண்டுகளில் ஜனநாயகம் இறந்துவிட்டதாக கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர்,  பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மக்கள் ஆணை பறிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், கோவா, ஜார்க்கண்ட், புதுச்சேரி, அருணாச்சல் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி அரசுகள். இந்த மாநிலங்களில் மக்கள் எங்களுக்கு ஆணையை வழங்கினர். ஆனால் தற்போது அந்த ஆணை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

“ராஜஸ்தானில் எம்எல்ஏக்கள் மீது வீசப்பட்ட பணத்தின் அளவு எங்களுக்கு தெரியம். அவர்களிடம் பெருமளவில் பணம் பேசுகிறது. இன்று, பாஜக ஒரு தேர்தலில் வெற்றி பெற விரும்பினால், 2 அல்லது 3 இடங்கள் இருந்தால் பெரும்பான்மை. ஆனால் நாங்கள் 10-15 இடங்களில் வென்றால், அது ஒரு வெற்றி அல்ல.இழப்பு, ஏனெனில் அங்கு பாஜக மக்களை வாங்குகிறது மற்றும் அவர்களது சொந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாற அனுமதிக்காத சட்டம் நம்மிடம் இருக்க வேண்டும். முதலில் செயல்படும் பாராளுமன்றம் தேவை. மேலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. தலையீடு இல்லாத நீதித்துறை நமக்குத் தேவை  என்று  கூறினார்.

மேலும், “ஒருபுறம், அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளீர்கள், நிதி மற்றும் ஊடகங்களில் அதிகம் வைத்திருக்கிறீர்கள். மறுபுறம், மற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க விடுவதில்லை. எல்லா முரண்பாடுகளையும் கடந்து அவர்கள் ஆட்சி அமைத்தாலும், அவர்களிடமிருந்து  மக்களின் ஆணைகள் பறிக்கப்படுகின்றன. நீதிபதிகள் அரசாங்கம் விரும்பும் முடிவுகளை எடுப்பதால் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி ஆகியவை தலைமை தாங்குகின்றன”, இது நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாறு மீதான தாக்குதலாகும் என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election congress rahul gandhi in thuththukudi

Next Story
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பெற்றது ஏன்? அன்புமணி விளக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express