ஒற்றுமையை நிரூபித்த திமுக, அதிமுக… ஒரே புகைப்படத்தால் எழுந்த குழப்பம்

Tamilnadu Assembly Election : தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக அதிமுக கட்சிகள் ஒரே புகைப்படத்தை பயன்படுத்தியதால் குழப்பம்

Tamilnadu Assembly Election 2021 DMK Vs ADMK : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, மற்றும் அதிமுகவினர் விளம்பரங்களுக்கும் ஒரே புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ததேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.  மேலும் இந்த தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடையேதான் உண்மையான போட்டி நிலவி வருகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக திமுகவை தாக்கும் விதமாக அதிமுகவும், அதிமுகவை தாக்கும் விதமாக திமுகவும் தங்களது ஆதரவு தரும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.  மேலும் திமுக, மற்றும் அதிமுகவிற்கு விளம்பரங்கள் தயாரிக்கும் பணியில் பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திமுகவிற்கு சென்னையை தலைமையிடமாக கொண்டும், அதிமுகவிற்கு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை திருச்சி உள்ளிட்ட சில இடங்களிலும் விளம்பரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த குழுக்கள் வீடியோ, துண்டு பிரசுரங்கள் மற்றும் இணையள விளம்பரங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இதில் வீடியோ விளம்பரங்களில் எவ்வித குழப்பமும் ஏற்படாத நிலையில், துண்டு பிரசுரங்களில் தற்போது பெரும் குழப்பம் வெடித்துள்ளது.  திமுக மற்றும் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களில் ஒரே பெண்ணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது வாக்காளர்களிடையெ பெரும் குழப்பதைதை ஏற்படுதுதியுள்ளது.

இதில் திமுக தரப்பில் கடந்த மார்ச் மாதம் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது இந்த புகைப்படத்தை பயன்படுத்தினோம் என்று கூறியுள்ள நிலையில், இந்த படத்தை முதலில் பயன்படுத்தியது நாங்கள் தான், கடந்த ஜனவரி மாதம் மாத இதழ் ஒன்றுக்கு கொடுத்த விளம்பரத்தில், இந்த புகைப்படத்தை பயன்படுத்தினோம்” என்று கூறியுள்ளனர்.

ஆனால் உணமை என்னவென்றால், கூகுளில் சென்று  தமிழ் உமன் (Tamil Women) என்று தேடும்போது http://www.shutterstock.com என்ற இணையத்தளத்தில் இந்த பெண்ணின் புகைப்படம் முன்னிலையில் காண்பிக்கப்படும். இதில் இந்த இணையதளத்தில் உள்ள புகைப்படங்களை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும்போது புகைப்பட்டத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பல நிறுவனங்கள் பயன்படுத்தினால் கட்டம் குறைவாகவும், ஒரு நிறுவனம் பயன்படுத்தினால் கட்டணம் அதிகமாகவும் பெறப்படும்.

இதனால் தேர்தல் செலவை குறைக்கும் வகையில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தை தனது விளம்பரங்களுக்கு பயன்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election dmk and admk use same photo for advetisment

Next Story
News Highlights: இன்று தமிழக பாஜக தேர்தல் அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com