/tamil-ie/media/media_files/uploads/2021/03/EV-Velu.jpg)
Tamilnadu Assembly Election IT Raid For DMK Candidate : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்த வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த்தேர்தலுக்கான அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ. வேலுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு தனது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.