Advertisment

சென்னையில் முகாமிட்ட திமுக வேட்பாளர்கள்: அமைச்சரவையில் இடம் பிடிக்க சீக்ரெட் மூவ்

திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்தபடியே தனது ஆட்சியில், நியமிக்க இருக்கும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியலை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
சென்னையில் முகாமிட்ட திமுக வேட்பாளர்கள்: அமைச்சரவையில் இடம் பிடிக்க சீக்ரெட் மூவ்

தமிழக சட்டசபை தேர்தலில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் உள்ள திமுகவினர் அமைச்சரைவை பட்டிலை தயார் செய்துள்ள நிலையில், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது யார் என்பதை அறிய திமுக வேட்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

Advertisment

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவு வரும் மே 2-ந் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்களும் இந்த தேர்தல் முடிவக்கான காத்திருக்கின்றனர். இதில் தேர்தலுக்கு முன் மற்றும் தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.  இதனால் மிகுந்த நம்பிக்கையில் உள்ள திமுகவினர், அமைச்சரவை மற்றும் அதிகரிகளாக யாரை நியமிப்பது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த  முறை ஆட்சியை தவறவிட்ட திமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வட மாநிலத்தை சேர்த்த தேர்தல் ஆலோசகரை நியமித்து கடந்த ஒரு வருடமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் சென்ற இடமெல்லாம் வரவேற்பு அதிகம் இருந்த  நிலையில், ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து, 70 % அதிகமாக வாக்களார்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த கையோடு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில், வரும் தேர்தலில் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்தபடியே தனது ஆட்சியில், நியமிக்க இருக்கும் அமைச்சர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியலை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பட்டியல் குறித்த விவரங்கள் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் ஆகியோரை தவிர மற்ற யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தனது ஆட்சிகாலத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை ஆட்சி முடியும் வரை மாற்றம் செய்ய மாட்டார். இதில் அவர் ஆட்சியில் இருந்த அத்தனை முறையும் ஒரு குறிப்பிட்ட குழுவினரே அமைச்சர்களாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது தனது ஆட்சிகாலத்தில் ஸ்டாலின் இந்த முறையை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், மூத்த தலைவர்கள மட்டுமல்லாது அமைச்சர் பதவியில், இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.    

கட்சியின் வேட்பாளர்கள் அனைவரின் மீதும் உள்ள குற்ற வழக்குகளின் நிலை, வழக்குகளின் எண்ணிக்கை இந்த பட்டியலில் யார் யார் பெயர் இடம்பெற்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் புதுமுக வேட்பாளர்கள் வரை என அமைவரும்  காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளையும் பொருட்படுத்தாமல் சென்னையில் முகமிட்டுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இன்னும் பிற காரணங்களால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பது முடியாத ஒன்றாக உள்ளது.

இதனால் வேறு வழிகளை கையாளும் வேட்பாளர்கள், ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினை தொடர்புகொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஸ்டாலினின் மருமகனும், ஐபேக்கை ஒன்றமைக்க முக்கிய காரணமாக இருந்த சபரீசனை தொடர்புகொண்டு வருகின்றனர். மேலும் சில புதுமுக மற்றும் இளம் வேட்பாளர்கள் இளைஞர் கோட்டாவில் தனக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் இந்த பட்டியலில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்ப உறவினர்கள் மற்றும் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் அதிகாரிகளை தொடர்புகொண்ட வருகின்றனர். ஆனால் வேட்பாளர்கள் அனைவரும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்த விபரங்கள் தற்போது கசியா வாய்ப்பே இல்லை என ஸ்டாலினின் தொடர்புடைய சிலர் கூறியுள்ளனர்.

திமுகவில் நடைபெறும் இந்த சலசலப்புக்கு முக்கிய காரணம், கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை என அனைவரும் திமுக நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என்ற அதீத நம்பிக்கை தான். ஆனால் திமுகவின் நம்பிக்கைக்கு பலன் கிடைக்குமா? தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் அதுவரை பொருத்திருப்போமா...

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment