தமிழகத்தில் சட்டசபை தெர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 70% அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ந் தேதி எண்ணப்படும் நிலையில், வாக்குப்பதிவு முடிந்தவுடன வாக்கு எந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் அந்த நாளுக்காக காத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் திராவிட கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்தக்கணிப்பில், திமுகவுக்கு அதிக வெற்றி வாய்பு என்று தகவல் வெளியானது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கிய திமுக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கியது. இதனால் திமுக அதிகபட்சமாக 180 தொகுதிகளில் போட்டியிட்டது.
இது தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்பில், திமுக 2021 சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியானது. ஆனால் தேர்தலுக்கு பின் வெளியான கருத்தக்கணிப்பு மற்றும உளவுத்துறை அறிக்கை அனைத்தும் அதிமுகவுக்கு சாதகமாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாமக 23 மற்றும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டநிலையில், அதிமுக 176 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தற்போது 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்யும் அதிமுகவுக்கு தேர்தலுக்கு பின் வெளியாக கருத்துக்கணிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி ஓய்வெடுத்து வருகிறார். இந்த சமயத்தில், சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி தனக்கு நெருக்கமான பலரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தற்போது தேர்தலுக்கு பின் வெளியான கருத்தக்கணிப்பின்படி , அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி என்றும், இதில் 20 முதல் 27 தொகுதிகளில், கடுமையான இழுபறி நீடிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணிக்கு 130 தொகுதிகள் இடைக்கும் என்று பல அறிக்கைகள் முதல்வர் பழனிச்சாமியின் கவனத்திற்கு சென்றுள்ளன. அதில், 85 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 40 தொகுதிகள் கடுமையான இழுபறி நிலவும் என்று கூற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இழுப்பறி நீடிக்கும் என்று கூறப்பட்ட 40 தொகுதிகள் குறித்து முதல்வர் பழனிச்சாமி, தனக்கு நெருக்கமான சில மூத்த அமைச்சர்களுடன் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் அமைச்சர் வேலுமணி, தனது நெருக்கமான நபர்களை வைத்து கள ஆய்வு மேற்கொண்டுள்ள தனது தரப்பிலான அறிக்கையை முதல்வரிடம் கொடுத்துள்ளார். இதில் இழுப்பறி நீடிக்கும் என்று கூறப்பட்ட 40 தொகுதிகளில், 20 தொகுதிளில் வெற்றிபெறுவோம் என்று முதல்வருக்கு உறுதி அளித்துள்ளார்.
இதனால் மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையுடன், தனக்கு நெருக்கமான அமைச்சர் தங்கமணியுடன் பேசியுள்ளார். இதில் முதல்வருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய அவர், வெளியில், முதல்வருக்கு இருக்கும் நம்பிக்கை எனக்கு இல்லை என்று வெளிப்படையாக கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மூத்த அமைச்சர்கள் பலரும் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசிவிட்டு வெளியில் சென்று தங்களது மனதில் தோன்றுவதை கூறி வருகின்றனர். எது எப்படியோ யார் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது இன்னும் 10 நாட்களில் உண்மை வெளிவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.