பிரச்சாரத்தில் கமல்ஹாசன் காயம்… பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய வானதி சீனிவாசன்!

Kamal Haasan Injury In Election Campaign : பிரச்சாரத்தின்போது காயமடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார்.

Tamilnadu Assembly Election 2021 Kamalhaasan Election Campaign : கோவை தெற்குதொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் காலில் காயமடைந்ததால், பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கபபட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்று என்று கூறி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வரும் சட்டசபை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலுக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கடந்த ஒரு வாரமாக கோவையில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் சாதாரணமாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வரும் அவர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ரசிகர்கள் தொண்டர்கள் என பலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றபோது தவறுதலாக அவரது காலை மிதித்துள்ளனர். இதனால் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் மருத்துவ பரிசோதனையில செய்துகொண்டார். இதில் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பிரச்சார கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கமல்ஹாசன், அதன்பிறகு ஓய்வில் இருந்தார். தற்போது சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காயமடைந்த கமல்ஹாசன் விரைவில் குணமடையவேண்டும் என்று கூறி கோவை தொற்கு தொகுதியின் பாஜக வேட்பாளரும் பாஜக மகளிர் அணியின் செயலாளருமான வானதி சீனிவாசன் கமல்ஹாசனுக்கு பழக்கூடை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர் நலம்பெற வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election makkal neethi maiyam kamal injury

Next Story
கொல்கத்தா பேரணி : வங்கத்துப் புலிகளே உங்களுக்கு அன்பு வணக்கங்கள்… தமிழில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்Mamata Banerjee Kolkata Rally Today LIVE Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com