Tamilnadu Election campaign : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் உளறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும்அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது மக்களிடம் பேசிய அவர், தற்போது ஒரு சிலிண்டரின் விலை 4500 முதல் 5000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தாய்மார்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் விலை இலவசமாக தரப்படும் என கூறினார். மேலும் ஸ்டவ் அடுப்புக்கு டீசல் தேவையில்லை எனறும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்ட பொதுமக்கள் சிரித்தபடி அமைச்சர் உளறத்தொடங்கிவிட்டார் என்று கூறிக்கொண்டே சென்றார்கள்.
இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தராததால் தாங்கள் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என கூறி அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"