Advertisment

மயிரிழையில் தப்பிய அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன்: தாக்குதலில் தொண்டர்கள் காயம்

Assembly Election Tamilnadu : சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீது மர்மநபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
மயிரிழையில் தப்பிய அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன்: தாக்குதலில் தொண்டர்கள் காயம்

Tamilnadu Assembly Election AIADMK Candidate Attack In Vyasarpadi : தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வியாசர்பாடியில் அதிமுக வேட்பாளர் என்.ஆர்.தனபால் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக அசாம் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து தமிழக்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 4-ந் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு செகரிப்பில் ஈட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் என்ஆர்.தனபாலன் வியாசர்பாடி தொகுதியில் தீவிர வாக்கு செகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர் மீது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அரிவாள் மூலம் தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தனபாலன் சுதாரத்துக்கொண்டதால் தாக்குதலில் இருந்து தப்பியள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் ஒரு அதிமுக தொண்டர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் வருகிறார்.

மக்கள் கூட்டத்தில் தனபாலன் உரையாற்றும்போது, கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த மர்மநபர் ஒருவர் அரிவாளுடன் தாக்க முயன்றதாகவும், இதனை எதர்பாராத தனபாலன், தன்னை காத்துக்கொள்ள சற்றுவிலகிய நிலையில், அவருக்கு அருகில் நின்றிருந்த கட்சி உறுப்பினர் இந்த தாக்குதலில் சிக்கி காயமடைந்த்தாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தார். மேலும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மற்ற அதிமுக தொண்டர்கள் தனபாலனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் நடத்திய குற்றவாளியைத் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று சந்தேகப்படுவதாகவும், தாக்குதல் நடத்திய நபர் எதிர் கட்சியிலிருந்து வந்தவரா, அல்லது உட்கட்சி பூசல் காரணமாக இது நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறிய போலீசார், குற்றவாளி பிடிபட்டால் மட்டுமே தாக்குதலின் பின்னணியின் உள்நோக்கம் குறித்து தெரியவரும் குற்றவாளியின் அடையாளத்தை உறுதிப்படுத்த தாக்குதலின் சிசிடிவி கேமரா காட்சிகளை நாங்கள் சோதித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலில் "காயமடைந்த நபர் தனது வேட்பாளரை பாதுக்கக மேற்கொண்ட முயற்சியில் காயமடையவில்லை என்றும், அவர் தற்செயலாக காயமடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அரசியல்வாதிகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல இடங்களில் இருந்து புகார்கள் வந்து வருகிறது. அரசியல்வாதிகள் தங்கள் பகுதிகளுக்கு வருகை தருவதைக் கண்டித்து பல பகுதிகளில் வசிப்பவர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்களும் அவர்களுக்கு கிடைத்துள்ளன. அந்தந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் அரசியல் தலைவர்களின் வருகையின் போது பாதுகாப்பை உயர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tamilnadu Assembly Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment