எடப்பாடியில் எகிறிய வாக்கு சதவிகிதம்; கொளத்தூரில் வீழ்ச்சி: தலைவர்கள் தொகுதி நிலவரம்

Assembly Election Tamilnadu : தமிழக சட்டசபை தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பதிவான வாக்குகள் விபரம்

Tamilnadu Assembly Election CM Candidate : தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல்) நடைபெற்றது. தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர் இல்லாமல் நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான் என 5 பேர் போட்டியிட்டனர். இதற்காக அக்கட்சியினர் தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளர்கள் 5 பேரும் இறுதி நாள் பிரச்சாரத்தில் தங்களது சொந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில், மொத்தம் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னையில் 59.06 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதில் முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவாக வாக்குளின் விவரங்கள் :

எடப்பாடி தொகுதி (முதல்வர் பழனிச்சாமி)

முதல்வரின் சொந்த எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை அதே தொகுதியில் முதல்வர் வெட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் அவருக்கு சாதகம், பாதகம் என இரண்டும் சம்மாக இருந்தாலும் மக்களின் நிலைபாடே வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 85.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 285205 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் 244125 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதி (மு.க.ஸ்டாலின்)

கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது 3-வதுமறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ஸ்டாலிள் களமிறங்கிய இந்த தொகுதியில், மொத்தம் 6.52 சதமவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

சேப்பாக்கம் (உதயநிதி ஸ்டாலின்)

கடந்த தேர்தல்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது அவரது பேரனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இந்த தொகுதியில், 58.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

போடி (ஒ.பன்னீர்செல்வம்)

2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தற்போது 3-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று 73.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவில்பட்டி (டிடிவி தினகரன்)

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று 67.43 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கு (கமல்ஹாசன்)

முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாஜகவின் மகளிர் அணி தலைவி வானதி சீனிவான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், 60.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவெற்றியூர் (சீமான்)

முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் நேற்று 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில், 58.40 சதவீத வாக்குகளும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில், 81.90 சதவீதம் வாக்குகளும், நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதியில், 66.90 சதவீத வாக்குகளும், எச்.ராஜா போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில், 66.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election percentage of votes for cm candidate constituency

Next Story
கடவுள் இடதுசாரிகள் பக்கம் துணை நிற்கிறார் – கேரள முதல்வர்On Kerala voting day, Sabarimala in focus, CM says ‘Gods with LDF’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com