தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்

PM Modi Tamilnadu Campaign : தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Tamilnadu Assembly Election PM Modi Campaign In tamilnadu : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர்கள் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் சட்டநபைதேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். இதற்கான பணிகளில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு முதல்வர், துனை முதல்வர், தமிழக பாஜக தலைவர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்கு அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு பொதுகூட்டத்தில் காலை 11.30 மணிக்கு கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் திருப்பூர் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட 13 பாஜக வேட்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மோடி இன்று புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election pm modi campaign in tamilnadu

Next Story
கமல்ஹாசன் கட்சிக்கு திமுக வேட்பாளர் வந்து விடுவாராம்: கஸ்தூரி ருசிகர பிரசாரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com