Tamilnadu Assembly Election Campaign : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நாளை முதல் சட்டசபை தேர்தலுக்கான் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இதில் முதற்கட்டமாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6ந்தேதி சட்டசபை தேர்தலுவக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சியின்ர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக5 பேர் போட்டியிட்டாலும் அதிமுக மற்றும் திமுக இடையேதான் பலமாக போட்டி நிலவி வருகிறது. அதில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், 2 தேர்தல்களுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க திமுகவும் முழு மூச்சாக களமிறங்கியுள்ளனர். இதில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்களை கவர வித்தியாசமான யுக்தியை கைாயண்டு வருகின்றனர். இதில் பல வேட்பாளர்களின் செயல்பாடுகள மக்களை வெகுவாக கவர்சந்து வருகிறது.
ஸ்டாலின் என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார் – முதல்வர் பழனிச்சாமி:
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவிலேயே சாதி, மத மோதலின்றி தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
திமுக எந்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல – ஸ்டாலின் :
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.தேர்தல் பிரசாரத்தின்போது அவர்கள் திமுகவை விமர்சித்துதான் பாஜக, அதிமுக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனறே தவிர அவர்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள், மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து கூற அவர்களுக்கு எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும் அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாப்பதே திமுகவின் கடமை. இந்துக்களுக்கு எதிராக உள்ளது போல் சித்தரித்து திமுக மீது பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. திமுக எந்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என கூறியுள்ளார்.
ஸ்டாலின்தான் வராரு பாடலுக்கு நடனம் :
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நல்லதம்பி தொகுதிக்கு பிரச்சாரம் மேற்கொண்டபோது, திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள், திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலான ‘’ஸ்டாலின்தான் வராரு’’ என்ற பாடலுக்கு நடனமாடி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ,ஈடுபட்டனர். தொண்டர்களின் இந்த நடனம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை தவறாக திரித்த பெண் :
சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளில் ஆதிதிராவிடரோ அல்லது பழங்குடியின வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் 30 ஆயிரத்திற்கு பதிலாக 60 ஆயிரம் நிதியுதவியும், 8 கிராம் தங்க நகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 30 ஆயிரம் பணமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
தற்போது இதனை தவறாக சித்தரித்த ஒரு பெண் முதலியார், வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, முக்குலத்தோர், செட்டியார் சாதியைச் சேர்ந்த பெண்களை பட்டியலின, பழங்குடியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் உதவித் தொகை கொடுப்பதாக தி.மு.க விபரீத வாக்குறுதி கொடுத்திருக்கிறது’, என்று சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும், அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கபபட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை ஐபிஎஸ் ஆட்டம் :
பாஜக சார்பில் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அணணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை காயத்ரி ரகுராம் வரவேற்பாளர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து நடனமாடினார். இதில் அவருடன் சேர்ந்து வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ் நடனமாடியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க – நடிகை நமிதா வாய்ஸ்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகை நமிதா, பிரச்சாரத்திற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடினார். தொடர்ந்து கலாச்சாரமும் கடவுள் நம்பிக்கையும் உள்ள தமிழகத்தில் அந்த நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு எப்படி ஓட்டு போடுவது, அதனால் இங்கேயே பிறந்து உங்களுக்காக சேவை புரியும் வானதி சீனிவாசன் அக்காவிற்கு வாக்களியுங்கள் என்றும் அப்பொழுதுதான் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது பேச்சின் இறுதியில் அவரது பிரபல வார்த்தையான "மச்சான்ஸ் என்று கூறி தாமரைக்கு ஓட்டு போடுங்க. கோவையில் தாமரை மலரும் தமிழ் நாடு வளரும்" என்று தெரிவித்தார். இதில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் என்று நமிதா கூறியது மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை என்று மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது.
குடிக்க தண்ணீர் இல்லாதபோது வாஷிங்மிஷின் இலவசமா? கமல்ஹாசன் பிரச்சாரம்:
திமுக அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்ததை சீரமைப்போம் என்று என்று மக்கள் நீதி மய்யம கட்சியினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பிரச்சாரம் செய்த மகல்ஹாசன், தாம்பரத்தில் நிரந்தர பேருந்து நிலையம், பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படும். சம்பாதிப்பதற்காக சிலர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்களை விரட்டவே மக்கள் நீதி மய்யம் அரசியலுக்கு வந்துள்ளன. பாதி இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. இதில் வாசிங்மெஷின் இலவசமாக கொடுக்கிறேன் என்ற கெட்டிக்காரதனத்தை எங்கு சொல்லி தலையில் அடித்து கொள்வது.மக்களுக்காக செய்த தியாகம் போதும் விலகி கொள்ளுங்கள் புதிய ஒரு தமிழகம் உருவாக தயாராக உள்ளது. அதனால் நம்பிக்கையில் சொல்கிறேன் ”நாளை நமதே” என்று கூறியுள்ளார்.
நான் இருக்கும் வரை தாமரை மலராது - சீமான்
தமிழகத்தில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைவரையும் பாஜகவின் ‘பி’ டீம் என கூறுகின்றனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் உண்மையான ’பி’ டீம் திமுக - தான். சாரணர் இயக்கத்து தேர்தலில் கூட வெல்லமுடியாத ஒருவரை சட்டமன்றத்திற்கு கூட்டி சென்றவர்கள் இவர்கள் தான். பாஜக உடன் திமுக மறைமுக உறவில் உள்ளது. நானும் நாம் தமிழரும் இருக்கும் வரை இம்மண்ணில் தாமரை மலராது, பாஜக வரமுடியாது’ என கூறியுள்ளார்.
கலகலப்பாக முடிந்த சென்னை வியாசர்பாடி தேர்தல் பிரச்சாரம்
சென்னை வியாசர்பாடி தொகுதியில் அதிமுக சார்பில், போட்டியிடும் என்.ஆர் தனபாலன் தனது ஆதரவாளர்களுடன் எஸ்.ஏ காலணியில் உள்ள மசூதிக்கு வாக்குசேகரிக்க வந்தார். அப்போது திமுக வேட்பாளரும் தனது ஆதரவாளர்களுடன் வாக்குசேகரிக்க வந்தனர். ஆனால் வழிபாட்டு தளங்களில் பிரச்சாரம் செய்ய தடை விதித்திரு்பபதால், இரண்டு வேட்பாளர்களும் தெரு முனையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது தொழுகை முடிந்து வெளிவந்த வாக்களார்களிடம் இரு கட்சினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கோஷம் போடும் போது அதிமுகவினர் போடுங்கம்மா ஓட்டு என்று கூறி முடித்ததும் திமுகவினர் உதயசூரியன் சின்னத்தை பார்த்து என்று கூற தொடங்கினர். இதனால் மோதல் உருவாகும் என்று போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், கோஷத்தை மாற்றிய அதிமுக நமது சின்னம் என்று கூறிய போது திமுகவினர் உதய சூரியன் என்று கூறினர். இதனால் கடுப்பான அதிமுக வேட்பாளர் விரக்தியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிகழ்வு அக்கம் பக்கத்தினரிமையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
எய்ம்ஸ் செங்கல்லை திருடிய உதயநிதி – பாஜக பிரமுகர் புகார்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்தார். மேலும தனது பிரசசாரத்தின் போது ஒரு செங்கல்லை காண்பித்த உதயநிதி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது பாஜக பிரமுகர் நீதி பாண்டியன் என்பவர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கல்லை திருடிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார். இந்த உண்மையை அவரே ஒப்புக்கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.