வீட்டுக்கு ஒரு கோடி… பிரபல அரசியல் தலைவரின் திடீர் வாக்குறுதி

Tamilnadu Assembly Election : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது தொகுதியில் நமிதா பிரச்சாரம் செய்ய நடிகை குஷ்பு தடை விதித்ததாக கூறப்படுகிறது.

Tamilnadu Assembly Election Campaign : தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய கட்சகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலரது பிரச்சாரங்கள் மக்களின் பொழுதுபோக்குக்கு குறை இல்லாத அளவுக்கு இருக்குனு சொல்லலாம்.

இப்படி சொல்றதுக்கும் காரணம் இருக்கு அது என்னான்னா போன வாரம் விருகம்பாக்கத்தில பிரச்சாரம் செஞ்ச திமுக வேட்பாளர் ஒருத்தரு எங்களுக்கும் தோசை சுட தெரியும் நாங்ளும் பெரிய சமையல்காரங்கதான் இப்போ நிரூபிக்கரன் பாருங்கனு சொல்லி ஹோட்டல்ல தோசை சுட ஆரமிச்சிட்டாரு அந்த வீடியோக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தாங்க… வீட்ல அவரேட குடும்பத்துக்கு தோசை சுட்டு கொடுத்துருப்பாரானு தெரியால பாவம் மனுசன் மக்களுக்காக அடுப்படில கஷ்டப்பாடாரு. இவருதான் இப்படினா சோழிங்கநல்லூர் தொகுதியில அதிமுக வேட்பாளர் ஒருத்தரு நீ தோசை சுட்ட நா கம்பு சுத்துவேன் தெரியுமானு மான்கொம்பு, சிலம்பாட்டம் எல்லாம் அடி மக்கள சந்தோஷப்படுத்துனாரு… இதுல இவங்க பிரச்சாரம் பன்ன வந்தாங்கலா இல்ல சர்க்கஸ் காமிக்க வந்தாங்களானு அவங்கதான் பதில் சொல்லனும்.

போனவாரம் இப்படி நடந்துச்சி… இந்த வாரம் அவங்கள எல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி அரவக்குறிச்சில பாஜக வேட்பாளர் போட்டரு பாருங்க ஒரு ஆட்டம் செம்ம… அவர பாத்து நீங்க பிரச்சாரத்துக்கு வந்த மாதியே தெரிய செம்மயா ஆடுறீங்க போங்கனு மக்கள் எல்லாம் மைன்ட் வாய்ஸ்ல பேசுன மாதிரி இருந்துச்சி அந்த அளவுக்கு அண்ணாமலை ஐஏஎஸ்சும் நடிகை காயத்ரி ரகுராம் பிரிச்சி மேஞ்சிட்டாங்கனு பேசிகிறாங்க… இதுக்கு நீங்க வீட்லயே ஆடிருக்கலாமே எதுக்கு வெளியில வந்து ஆடுறீங்கோ…. தேசிய கட்சியான நீங்களே இப்படி பண்ணா நாங்க விட்ருவோமானு கௌம்பிட்டாங்க விடுலை சிறுத்தைகள் ஸ்டாலின்தான் வராரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாங்கனா பாத்துகோங்க… என்ன ஆட்டம் சாமி

நீங்களாம் ஆடிதான் பேர் வாங்குவீங்க ஆனா நாங்க பேசியே பேர் வாங்குவேன் தெரியுமானு பாமக தூள் கௌப்பிட்டாரு தெரியுமா… தர்மபுரி பென்னாகரத்துல பிரச்சாரம் செஞ்ச அவரு மருத்துசத்துல நார்வே பின்லாந்து, சுவீடன் மருத்துவத்துல சிறப்பா இருக்க மாதிரி தமிழகமும் சிறப்பா வளரும் அதுக்கு அதிமுக ஆட்சிக்கு வரனும் சொன்னாரு… ஆனா 10 வருஷமா அதிமுகதான் ஆட்சில இருக்குனு தலைவர் மறந்துடாரு போல.. அப்புறம் திமுகவுக்கு ஓட்டுபோட்டா தமிழகம் வளர்ச்சி பாதையில இருந்து பின்தங்கிடும் அதிமுக ஆட்சில தமிழகம் வளர்ச்சி அடைஞ்சிருக்கு திமுக ஜெயிச்சா இந்த வளர்ச்சி இருக்காதுனு பேசினாரு… ஆனா என்னென்ன வளர்ச்சினு சொல்ல மறந்துட்டிங்களே தலைவரே…

ஏற்கனவே ஸ்டாலின் முதல்வரா ஆன உடனே மணல் அள்ள போலாம்னு பரபரப்ப உண்டாக்குன திமுக செந்தில்பாலாஜி இப்போ புது பிரச்சினைல சிக்கிட்டாரு தெரியுமா? அது என்னானா 2011 ல இருந்து 2015 வரைக்கு போக்குவரத்து துறை அமைச்சரா இருந்த அவரு வேலை வாங்கி தரதா சொல்லி 62 லட்சம் மோசடி செஞ்சிட்ருனு சொல்லி அவர் மேல குற்றப்பத்திரிக்க தாக்கல் பண்ணிட்டாங்… நேத்துதான உங்கள நல்லவரு வல்லவருனு சொன்ன அதுக்குள்ள இப்படி சிக்கிட்டிங்களே ஸ்டாலின் (மைன்ட் வாய்ஸ்).

தமிழகத்துல தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரம் பரபரப்பா போய்ட்டு இருக்கு இதுல சினிமா நடிகர் நடிகைகள் அதிகமா பாஜகவுலதான் இருக்காங்க. இப்போ அவங்க பிரச்சாரத்தையும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க இதுல மச்சான் நடிகை நமிதா நேத்து கோயம்புத்துர்ல வானதி சீனிவாசனுக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணாங்க அப்போ கமல்ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லனு விமர்சனம் பண்ணாரு. ஆனா இப்போ அவருக்கு குஷ்பு தொகுதியில பிரச்சாரம் பண்ண்ணும்னு ஆசையாம்… இதுக்காக பலதடவ குஷ்பு கிட்ட போன்ல பேசிருக்காங்க ஆன குஷ்பு ரெஸ்பான்சே இல்லையாம்…

நீங்க பதில் சொல்லலனா நா தலைவர்கிட்ட போறனு சொல்லிட்டு நமிதா பாஜக தலைவர்கிட்ட போய் கம்லைண்ட் பண்ணிட்டாங்க.. ஆனா நமிதா கம்லைண்ட்க்கு பதில் சொன்ன குஷ்பு நானே சீனியரு இவரு எனக்கு பிரச்சாரம் செய்யனுமா அதல்லாம் எனக்கு தேவையில்லனு சொல்லிட்டாரம். இவங்களுக்குள்ள எவ்ளே ஈகோ பாருங்க… இவங்கதான் அப்படி செய்ராங்கனு பாத்த மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செஞ்சாரு பாருங்க மக்களே மிரண்டு போய்ட்டாங்கனா பாத்துக்கங்களேன்… அவரு என்ன பண்ணாருனா பிரச்சாரதுக்காக ரோட்ல நடந்து வந்துருக்கான திடீர்னு பாத்த கைல அரிவாள எடுத்து கருவேள மரத்த வெட்டிபுட்டாரு கேட்ட இயற்கைய பாதுகாப்போம்னு சொல்லிட்டு போய்ட்டாரு… உங்களதாங்க தமிழ்நாடே இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தது

நீங்களாம் தோசை சுட்டது கம்பு சுத்துனது சென்னைல ஆனா நா இருக்குறது நாகப்பட்டினத்துல இங்க என்னோப பர்பாமன்ஸ பாருங்கனு சொல்லிட்டு அதிமுக வேட்பாளர் ஒருத்தரு ஒரு பொண்ணு துணி தொவைச்சி கொடுத்துருக்காரு மக்கள் மேல எவ்ளோ அக்கர பாருங்க… பாஸ் இந்த மேட்டர் உங்க வீட்டுக்கு தெரியுமா? இப்படிதாக் கிருஷ்ணகிரில திமுக வேட்பாளர் ஒருத்தரு வட்டார மொழில மக்கள்ட பேசரனு சொல்லிட்டு சத்தியமா உதயசூரியனுக்கு ஓட்டு போடுவீங்காளானு பெண்களை பாத்து கேட்டுருக்காரு.. அதுக்கு அவங்களும் கண்டிப்பா போடுவோம்னு சொல்லிருங்காங்க… அப்போ அங்க இருந்த மாரியம்மன் கோவில்ல சத்தியம் பண்ணுங்கனு கேட்டுருக்காரு…

அதிமுக ஆட்சில விலைவாசி உயர்வுனு சொல்றிங்க நீங்க ஆட்சிக்கு வந்த விலைவாசி குறைக்க என்ன பண்ணுவீங்கனு கேட்ருக்காங்க…ஏம்மா நம்புங்கமா இதுக்காக பத்திரமா எழுதி கொடுக்க முடியும்னு கெட்டுருக்காரு (அய்ய்யோ மக்கள் சிந்திக்க ஆரமிச்சிட்டாங்களே என்ன பன்றது வேட்பாளர் மைண்ட் வாய்ஸ்) இந்த தேர்தல்ல நீங்க 20 தொகுதில நின்னாலும் உங்களுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்காதுனு பாஜகவுக்கு கருத்துக்கணிப்பு சொல்லுதாம். இதனால கடுப்பான டெல்லி தலைமை அதெல்லாம் எனக்கு தெரியாது 5 சீட்டாவது வேணும்ன் கறாரா சொல்லிட்டாங்களாம்… அவங்க என்ன வச்சிக்கிட்ட வஞ்சன பண்றாங்க மக்கள் ஓட்டு போட்டாதானங்க ஜெய்க்க முடியும்….

இவங்கெல்லாம் என்ன வேனாலும் பண்ணட்டும் தமிழ்நாளே என்ன திரும்பி பாக்குற மாதிரி செய்றன் பாருங்கனுசொல்லி கொளம்பிட்டாரு இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத். தமிழக சட்டசபை தேர்தல்ல 71 தொகுதில போட்டியிடுறோம். வாங்கிக்கோங்க தேர்தல் அறிக்கைனு விட்ருகாரு பாருங்க மனுசன் ஒவ்வொரு குடும்பத்தக்கும் ஒரு கோடி கொடுத்து அவங்கள கோடீஸ்வர்ரா மாத்திடுவேன் 18 வயசு மேல இருக்க எல்லாருக்கும் ராணுவ பயிற்சி. மதுவிலக்கு. பசுவதை தடுப்பு சட்டம் எல்லாம் அமல்படுத்துவோம்னு சொல்லிருக்காரு… வீட்டுக்கு ஒரு கொடியா… சார் அதுக்கு ஜிஎஸ்டி கேக்கமாட்டிங்களே…

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நாம் தமிழர் சீமான் இந்தியாவோட பேரையே மாற்றுவேன்னு சொல்லிட்டாரு பாருங்க… பாஜக இந்தியாவோட பேர மாத்துரதா சொல்லராங்க ஆனால நா இந்தியாவோட பேர தமிழ்நாடுனு மாதிருவேன்னு சொல்லிருக்காரு… அப்போ இமயம் முதல் குமரி வரி தமிழ் ஆட்சி மொழினு சொல்லிடலாமா தலைவரே…. நீங்க எங்கவேனாலும் ஆட்டம் போடுங்க ஆனா நாங்க கோவையில் ஆடுவோம் தெரியுமானு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் கோலாட்டம் போட்ட வீடியோதான் இன்னைக்கு டிரெண்ட்டிங்… தாண்டியா ஆட்டம் போடுவோமா…. இதுல என்ன ஹைலைட்னா வானதி சீனவாசனுக்கு ஆதரவா கோயம்புத்தூர்ல வடமாநில பெண்களே பிரச்சாரம் செய்ராங்களாமே பிரமாதம் போங்க….

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election political parties campaign

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express