Tamilnadu Assembly Election 2021 : தனது சகாயம் அரசியலமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான் என 5 முதல்வர் வேட்பாளர்கள் இந்த தேர்தலில்களமிறங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பணிகளில் ஈடபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகயை வெளியிட்டனர். தற்போது இந்த தேர்தலில் பிரச்சாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதற்காக சமீபத்தில் சகாயம் அரசியலமைப்பு என்ற கட்சியைத் தொடங்கிய அவர், தமிழகத்தின் சில குறிப்பிட்ட தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளார்.
சிறந்த ஐஏஎஸ் அதிகாரி என மக்களிடம் பெயரெடுத்த அவர், சமீபத்தில் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அவர் பதவியில் இருக்கும்போதே அரசியலுக்கு வரவேண்டும் என்று இளைஞர்கள் பலர் வற்புறுத்திய நிலையில், சகாயம் இளைஞர் பேரவை என்ற அமைப்பை தொடங்கினர். தற்போது அரசியலில் காலடி வைத்துக்க சாகயம் ஐஏஎஸ், தேர்தலில் போட்டியிடும் தன் கட்சி சார்பில் போடியிட்யிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட நடிகர் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் நான் அதில் நாட்டம் காட்டவில்லை என கூறியுள்ளார். தற்போது அவரது அரசியலமைப்பில் இருந்து 20 வேட்பாளர்கள் போட்டியிட்டும் நிலையில், சகாயம் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil