வளர்ச்சி திட்டங்கள் குவித்து வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தேசிய கட்சகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை தொற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிரச்சாத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக இன்று காலை கோவை வந்த அவர், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் பேரணியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேட்பாளர் வானதி சினிவாசன் பயணித்தார். தொடர்ந்து கொவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்மிருதி ராணி, மகளிர் பெரணி நிறைவடைந்த தெப்பக்குளம் பகுதியில் மக்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் டார்ச் லைட்டில் வராது. புண்ணியம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் வரும். அந்த செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் என்று கூறிய அவர், வளர்ச்சித் திட்டங்களின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? இது பற்றிவிவாதித்தால் தான், யாருக்கு ஆட்சித்திறன் உள்ளனது என்பது தெரிய வரும் என்று கமல்ஹாசனுக்கு சவால் விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"