சீனியர் நிர்வாகிகளுக்கு முக்கிய இலாகா கிடையாதா? திமுக ஷாக்

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக அமைச்சரவையில் கருணாநிதியின் வழக்கத்தை மாற்ற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் ஒரே ட்டமான நடைபெற்ற இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தேர்தல் முடிவு எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் வாக்குப்பதிவுக்கு முன்னும், வாக்குப்பதிவுக்கு பின்னும வெளியான கருத்துக்கணிப்புகள் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளுக்கும் சாதகமாகவே உள்ளது.

இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தலில் திமுக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் மிகுந்த உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.  கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட திமுக, இந்த தேர்தலில் கண்டிப்பாக ஆட்சியை  பிடிக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே தங்களது வியூகங்களை வகுத்து, திமுக தலைவர் இஸ்டாலின் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

தற்போது இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில்,   திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே தனது அமைச்சரவையை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு வார காலமாக கொடைக்கானலுக்கு  தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஸ்டாலின் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், அமைச்சர் பதவிகளை யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாமல் முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்த முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் முக ஸ்டாலின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏற்கனவே ஸ்டாலின், கருணாநிதி போன்று ஒரு சிறந்த பேச்சாளர் அல்ல அதனால் அவர் தன்னைத செயலில் தான் நிருபிக்க முடியும் என்று அரசியல் பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது அமைச்சரவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் தனது ,அமைச்சரவையில் முத்த தலைவர்கள் மட்டுமல்லாது புதுமுகங்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு கீதா ஜீவன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், அவர்களுடன் சேர்த்து கட்சியில் இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க பரீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த போது முதல்வராக இருந்து கருணாநிதி, தொடக்கத்தில் அமைச்சர் பதவி வழங்கினால், ஆட்சிக்காலம் முடியும் வரை அவரே அந்த பதவியில் தொடர்வார். ஜெயலலிதா போன்று அமைச்சர்கைளை மாற்றும் எண்ணம் இல்லாதவர் கருணாநிதி. ஆனால் தற்போது இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இதில் முக்கிய தகவலாக முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் அமைச்சரவையின் முக்கிய இலாக்கா வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. கடந்த முறை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சிலர் மீது பொதுமக்களிடம் அதிருப்தி நிலவி வருவதாகவும், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும், முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படமாட்டாது என்றும் கூறப்படுகிறது. இதனால் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ராகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், கொடைக்கானல் குடும்ப ஆலோசனையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய துறைகளான பொதுப்பணி, மின்சாரம்,உள்ளாட்சி சுகாதாரம்,நெடுஞ்சாலை, வருவாய் உள்ளிட்ட வருவாய் வரும் துறைகளை ஒதுக்ககூடாதென முடிவெடுத்துள்ள ஸ்டாலினுக்கு கட்சிக்கு உழைக்கவும், தன்னை தலைவராக ஏற்றுக்கொள்ளவும் மட்டும் மூத்த நிர்வாகிகள் தயவு வேண்டும்.

ஆட்சி அதிகாரம் வந்த பின்பு தன் குடும்பத்தினர் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் புதிய அடிமைகளை மந்திரியாக்க வேண்டும், கொத்தடிமைகளை வைத்து கொண்டு நீங்கள் அமைக்கபோவது மந்திரி சபையா குடும்ப சபையா என்பது மே 2முடிவுக்கு பிறகு தான் தெரியும் ,மக்கள் முடிவுக்காக காத்திருங்கள் ஸ்டாலின், கனவு காணாதீர்கள் உங்கள் அண்ணன் சொன்னது போல நீங்கள் என்றுமே வருங்கால முதல்வர்தான் என்பது நிஜமாகிவிட போகிறது என பதிவிட்டுள்ளார்.

தங்களது கட்சி நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், ரகசியமான அமைச்சரவை தொடர்பாக பணிகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது இந்த ஆலோனை குறித்த தகவல் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் வரை சென்றுள்ளது திமுக தலைவர்களிடடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ தேர்தலில் வெற்றி பெறுவது யார்? மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது வரும் மே 2-ந் தேதி தெரிந்து விடும் அதுவரை அரசியல் கட்சி தலைவர்களும், மக்களாகிய நாமும் பொறுமை காப்பபது அவசியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election stalin selected new face and youngster for minister

Next Story
இ.வி.எம். மெஷின் பாதுகாப்பு: ஒரே குரலில் திமுக-அதிமுக; மாறுபட்ட பாஜக
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express