8-ம் வகுப்பு தகுதி… ரூ3.75 கோடி கடன்! ஆச்சரியம் தந்த குஷ்பூ

Tamilnadu Assembly Election : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகை குஷ்பூ குறித்து உணர்ச்சிப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

Tamilnadu Assembly Election 2021 : சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து இவர் கடந்த 2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். ஆனால் அக்கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஆண்டு கட்சியில் இருந்து விலகிய குஷ்பு அதன்பிறகு பாஜனவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் களமிறங்குகிறது.  இதில் 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு களமிறக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று குஷ்பு வேட்புமனுதாக்கல் செய்த நிலையில், அவரைப்பற்றி உணர்ச்சிப்பூர்வமான தகவல் வெளியகியுள்ளது.

சிறுவயது முதலே வறுமையை வென்று வளர்ந்தவள் நான் என்று குஷ்பு அடிக்கடி கூறிவரும் நிலையில், நேற்று அவரது வேட்பு மனுவில்,  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இருந்து தொண்டர்களுடன் ஊவலமாக சென்ற அவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த  மனுவில் சொத்து பட்டியலையும் இணைத்துள்ள குஷ்பு, தன்  மீது தமிழகம் முழுவதும் 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து  தனது கையிருப்பாக ரூ.2 ,15,600, அவரது கணவர் சுந்தர்.சி கையிருப்பாக ரூ.1,10000 உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பெயரில் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி, 2 கார்கள் மற்றும் கணவர் பெயரில் 3 கார்கள், 495 கிராம் தங்கம், 9 கிலோ வெள்ளி உள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.4 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 693 மதிப்பில் அசையும் சொத்துக்களும், தனது கணவர் பெயரில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 98 ஆயிரத்து 58 மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளது என்று வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குஷ்பு வேட்பு மனுவில் கூறியுள்ளார். இதற்கிடையே குஷ்பு தனது கல்வி தகுதியாக கூறிய தகவல் தான் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  மராட்டியத்தை பூர்வீகமாக கொண்ட குஷ்புவுக்கு, இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒருவர் தனது அயராது உழைப்பினால் இவ்வளவு உயர்ந்திருப்பது உண்மையிலேயே கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்ற குஷ்பு சினிமா துறை மற்றும் பொது வாழ்வில் எவ்வளவு திறமையாகவும் தைரியமாகவும் செயல்படுவதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu assembly election thousand lights assembly constituency

Next Story
கடன் தள்ளுபடி அறிவிப்பு: தேர்தலில் அதிமுகவுக்கு உதவுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com